கூட்டுறவு சங்கத் தேர்தல் வேட்புமனுத்தாக்கலின்போது ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் அணியினருக்கிடையே மோதல் வெடித்தது. இதனால் பரபரப்பு ஏற்பட்ட தால் போலீஸ் குவிக்கப்பட்டது.
புதுக்கோட்டை நகரக் கூட்டுறவு வங்கித் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று காலை ஆரம்பித்தது. முதலில் ஈ.பி.எஸ் ஆதரவாளரான நகரச் செயலாளர் பாஸ்கர் எந்த எதிர்ப்புகளும் பிரச்னைகளும் இல்லாமல் வேட்புமனுத்தாக்கல் செய்தார். தொடர்ந்து அவர் தரப்பு ஆட்களே வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்துவந்த சூழலில், வெளியே காத்திருந்த அ.தி.மு.க-வின் முன்னாள் எம்.எல்.ஏ-வும் ஓ.பி.எஸ் ஆதரவாளருமான கார்த்திக் தொண்டைமானும் அவரின் ஆதரவாளர்களும் டென்ஷனாகி சத்தமிட ஆரம்பித்தார்கள்.
இதனால் வேட்புமனு பெறும் ஹர்பன் வளாகத்தில் பதற்றம் கூடியது. இதை முன் கூட்டியே கணித்து, போலீஸார் அதிக அளவில் குவிக்கப்பட்டிருந்தனர். தங்களை வேட்புமனுத்தாக்கல் செய்ய உள்ளே அனுமதிக்க வேண்டும் என்று கார்த்திக் தொண்டைமான் தொடர்ந்து குரல் கொடுக்க, அவரையும் அவரின் ஆதரவாளர்களையும் உள்ளே விட போலீஸ் மறுத்தது. இதனால் டென்ஷனான ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் போலீஸாரைக் கடுமையாகத் திட்டித் தீர்த்தார்கள்.
உள்ளே எந்த டென்ஷனும் இல்லாமல் நகரச் செயலாளர் பாஸ்கர் தலைமையில் வந்திருந்த ஈ.பி.எஸ் அணியினர் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். இந்த நிலையில், அங்கு பெரும் ஆரவாரத்தோடு வேட்புமனுத்தாக்கல் செய்யவந்த டி.டி.வி-யின் அம்மா மக்கள் முன்னேற்றக் கட்சியினர், ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் அணியினரே மோதிக்கொள்வதைப் பார்த்து, இவர்கள் உண்மையாகவே மோதிக்கொள்கிறார்களா அல்லது முன்பே பேசி வைத்துக்கொண்டு இரண்டு தரப்பும் நம்மை வேட்பு மனுத்தாக்கல் செய்யவிடாமல் இருக்க மோதிக்கொள்வதுபோல் நாடகம் ஆடுகிறார்களா என்று தங்களுக்குள்ளேயே பேசிக்கொண்டு ஓரமாக ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள்.
உச்சக்கட்ட கடுப்பில் இருந்த இரண்டு தரப்பும் ஒருகட்டத்தில் ஒருவரை ஒருவர் கல்வீசி தாக்கிக்கொள்ள ஆரம்பித்தார்கள். போலீஸ், கூட்டத்தைக் கலைக்க பெரும்பாடுபட்டது. புதுக்கோட்டை நகரச் செயலாளர் பாஸ்கர் அமைச்சர் விஜய பாஸ்கருக்கு நெருக்கமானவர் என்பதால் அதிகாரிகளும் போலீஸூம் அவர்களுக்கு சாதகமாகச் செயல்படுகிறது என்ற குற்றச்சாட்டை கார்த்திக் தொண்டைமான் கோஷ்டியினர் முன்வைத்தனர்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்