img
img

ஸ்டெர்லைட் ஆலை தூத்துக்குடியில் இருக்கக் கூடாது’ - கனிமொழி ஆவேசம்!
சனி 31 மார்ச் 2018 17:12:36

img

''ஸ்டெர்லைட் ஆலையின் விரிவாக்கத்தை அனுமதிக்கக் கூடாது. ஸ்டெர்லைட் ஆலையை தூத்துக்குடியிலிருந்து அகற்ற வேண்டும்'' என நெல்லை யில் கனிமொழி எம்.பி ஆவேசமாகத் தெரிவித்தார். தமிழகத்தில் கையாலாகாத அரசு செயல்பட்டுவருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். 

நெல்லை மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, தி.மு.க மகளிரணிச் செயலாளரான கனிமொழி எம்.பி, இரண்டு நாள் பயணமாக வந்துள்ளார். நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்ட மகளிரணி நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்ட அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, ’’மத்திய அரசு தமிழகத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையோடு நடத்துகிறது.

தமிழக எம்.பி-க் களைக்கூட பிரதமர் சந்திக்க மறுக்கும் நிலை உள்ளது. காவிரி விவகாரத்தில், மத்திய அரசு தமிழகத்துக்குத் துரோகம் செய்கிறது. கர்நாடகத் தேர்தலை மனதில் வைத்து மத்திய அரசு செயல்படுவதால், தமிழகத்தின் நலன் பாதிக்கப்பட்டிருக்கிறது. நாடாளுமன்றக் கூட்டம் நடைபெற முடியாத நிலை இருந்தபோதிலும், அதைப் பற்றி மத்திய அரசு கவலைப்படவில்லை. அதனால்தான், யாரையும் அழைத்துப் பேசி சுமுக நிலைமையை ஏற்படுத்தச் சிறிய முயற்சிகளைக்கூடச் செய்யவில்லை.

காவிரி விவகாரம் தொடர்பான உச்ச நீதிமன்றத் தீர்ப்பில், ‘ஸ்கீம்’ எனக் குறிப்பிடப்பட்டிருப்பது தொடர்பாக, நீதிமன்றத்திடம் விளக்கம் கேட்கப் போவதாக மத்திய அரசு தெரிவித்திருப்பதே காலதாமதம் செய்வதற்காகத்தான். கர்நாடகத் தேர்தலை மனதில் வைத்து மத்திய அரசு செயல்படும் விதம், தமிழ கத்தின் உரிமைகளையும் நலனையும் பாதிப்பதாக இருக்கிறது. ஆனால், இது தொடர்பாக மத்திய அரசுக்கு அழுத்தம்கொடுக்கும் நிலையில் தமிழக அரசு இல்லை.

காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் நலனைப் பாதுகாக்கும் எந்த நடவடிக்கையையும் தமிழக அரசு மேற்கொள்ளவில்லை. நாடாளுமன்ற விவாதங்க ளைக்கூட திசைதிருப்பும் வகையில் அ.தி.மு.க செயல்படுகிறது. இந்த கையாலாகாத அரசால், தமிழக மக்களுக்கு எந்தப் பலனும் கிடையாது. தமி ழகத்தின் உரிமைகள் அனைத்தும் பறிபோய்க்கொண்டிருக்கிறது. காவிரி விவகாரத்தில்,  தமிழர் நலனுக்கு எதிராகச் செயல்படும் பிரதமர் மோடி, தமி ழகம் வந்தால் கறுப்புக்கொடி காட்டப்படும் என கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். அத்துடன், அனைத்துக் கட்சிக் கூட்டத்தை யும் கூட்ட உள்ளார். அதில் எடுக்கப்படும் முடிவுப்படி செயல்படுவோம்.

ஸ்டெர்லைட் விவகாரம் மிகப்பெரிய மக்கள் பிரச்னை. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக, தொடக்கத்தில் இருந்தே மக்கள் போராடி வருகிறார்கள். அந்த ஆலையால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதுடன், நிலம், நீர் என அனைத்தும் பாதிக்கப்படுகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலருக்கும் சுவாசப் பிரச்னை இருக்கிறது. ஆனால், அந்த ஆலையின் விரிவாக்கத்துக்கு அனுமதி வழங்கியிருப்பது ஆச்சர்யம் அளிப்பதாக உள்ளது. ஸ்டெர்லைட் ஆலையின் விரிவாக்கப் பணிகளை அனுமதிக்கக் கூடாது. அந்த ஆலையை தூத்துக்குடியிலிருந்து அகற்ற வேண்டும்’’ என்றார். 

மகளிர் ஆலோசனைக் கூட்டம்

 

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்

தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன

மேலும்
img
இந்தியாவில் சூரிய சக்தியின் பயன்பாடு அதிகரிப்பு பிரதமர் மோடியை பாராட்டிய பில் கேட்ஸ்

நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு

மேலும்
img
தமிழகத்தில் மர்ம காய்ச்சல் ஒரே நாளில் 100 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி பீதியில் மக்கள்

சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்

மேலும்
img
மஸ்கட் ஏர்போர்ட்டில் இருந்த விமானத்தில் திடீர் தீ விபத்து- 14 பயணிகள் படுகாயம்

மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

மேலும்
img
9 பேரை கொன்ற ராணுவவீரருக்கு 18 ஆண்டுகள் சிறை

பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img