''கர்நாடகாவில், பி.ஜே.பி ஆட்சிக்கு வர பிரார்த்தனை செய்யுங்கள், அப்போதுதான் தமிழகத்துக்குத் தண்ணீர் வரும்'' என்று ஹெச்.ராஜா கூறிய கருத்து சர்ச்சையாகியுள்ளது.
மதுரையில் நடந்த வேல்சங்கம பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய ஹெச்.ராசா, ''காவேரி விவகாரத்தில், உச்ச நீதிமன்றத் தீர்ப்பில், காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற வார்த்தையே இல்லை. நதிநீர் பங்கீட்டுக்கு ஒரு ஸ்கீம் அமைக்க வேண்டும் என்றுதான் உள்ளது. அதன்படி, ஒரு திட்டத்தை மத்திய அரசு அமைக்கும். அதற்கான பணிகள் தொடங்கியுள்ளன. இதற்காகத்தான் நான்கு மாநிலத் தலைமைச் செயலாளர் கூட்டத்தைக் கூட்டி, உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மத்திய அரசு படித்துக்காட்டியது. தீர்ப்பின் அடிப்படையில் ஒரு திட்ட த்தை மத்திய அரசு செயல்படுத்தும்.
இப்போது மட்டும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்த வேண்டும் என்பவர்கள், நீட் தேர்வு விவகாரத்தில் ஏன் தீர்பை ஏற்க மறுத்தனர்? இந்த விவ காரங்களில், கர்நாடகத் தேர்தலை மையப்படுத்தக் கூடாது. தற்போது, கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி உள்ளது. அவர்கள்தான் தண்ணீர் தர மறுக்கி றார்கள். எனவே, பி.ஜே.பி ஆட்சிக்கு வர மக்கள் பிரார்த்தனை செய்ய வேண்டும். அப்போதுதான், காவிரி நீர் நமக்குக் கிடைக்கும்'' என்றார். ஹெச். ராஜா வின் இந்தப் பேச்சும், 'நாடார் சமூகத்தினர் இலங்கையிலிருந்து வந்தவர்கள்' என்று கால்டுவெல் கூறியுள்ளதாகக் குறிப்பிட்டுப் பேசியதும், பெரும் சர்ச்சையை ஏற்படுத்திவருகிறது.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்