"மத்திய அரசு, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவில்லை என்றால், தமிழக எம்.எல்.ஏ மற்றும் எம்.பி-க்கள் அனைவரும் பாராளுமன்றத்தை முற்றுகையிட்டுப் போராட வேண்டும் " என்று ஜி.கே வாசன் பேட்டி அளித்துள்ளார்.
நாகை மாவட்டம் மயிலாடுதுறையில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியபோது " மத்திய அரசு, காவிரி மேலாண்மை வாரியத்தை நடுநிலையோடு அமைக்கும் என எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கிறோம். நான்கு மாநிலங்களில், அதிக நஷ்டமடைந்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் என எதிர்பார்த்துக் காத்திருப்பது, தமிழக விவசாயிகள்தான். விவசாயிகளின் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு. மத்திய அரசு, கூட்டாச்சித் தத்துவத்தோடு செயல்பட்டு, நீதிமன்ற உத்தரவை மதித்து, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். மத்திய அரசு, தமிழக விவசாயிகளை இந்திய விவசாயிகளாகக் கருத வேண்டும்.
கர்நாடகத் தேர்தலை மனதில் வைத்து, ஒருதலைபட்சமாக செயல்படக் கூடாது. அனைத்து அரசியல் கட்சியினரும் ஒருமித்த கருத்தோடு இருக்கிறோம். இதுவரை பாரதப் பிரதமர் தமிழக முதல்வரையோ, மற்ற தலைவர்களையோ சந்திக்காதது தமிழகத்துக்கு மிகப்பெரிய தலைகுனிவு.
இரண்டு நாள்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாவிடில், தமிழக எம்.எல்.ஏ -க்கள், எம்.பிக்கள் என அனைவரும் திரண்டு பாராளுமன்றம், பிரதமர் அலுவலகம் மற்றும் ஜனாதிபதி அலுவலகத்தை முற்றுகையிட்டு, மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்போம். இதைப் பல மாதங்களுக்கு முன்பே செய்திருக்க வேண்டும்.
ஆனால், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியான பிறகு பாராளுமன்றத்தில் எம்.பி-க்கள் கொடுக்கும் அழுத்தம் எந்த அளவு பயனளிக்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். காவிரி டெல்டா பகுதிகளில் தண்ணீர் மாசுபட்டுள்ளதால், சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டுள்ளது. விளைநிலங்களைப் பாதிக்கக்கூடிய மீத்தேன், ஷேல் கேஸ், ஹைட்ரோ கார்பன் ஆகிய திட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதி தரக் கூடாது.
தமிழகத்தைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும். தமிழகத்தில் கூட்டுறவு சங்கத் தேர்தல் முறையாக நடைபெறவில்லை. ஆளுங்கட்சிக்கு ஆதரவாகவே தேர்தல் அதிகாரிகள் செயல்படுகிறார்கள் " என்றார்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்