காவிரி விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தலைமைச்செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடந்துவருகிறது.
இதைத் தொடர்ந்து, தமிழக சட்டமன்றத்திலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், டெல்லியில் மத்திய நீர்வள அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில், தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய நான்கு மாநில தலைமைச் செயலாளர்கள் மற்றும் அரசு உயர் அலு வலர்கள் கலந்துகொண்டனர்.
அதன் பின்னர், மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் மௌனம் காத்துவந்தது. அ.தி.மு.க எம்.பி-க்களும் நாடாளுமன்றத்தின் மக்களவையை நடத்தவிடாமல் அமளியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், உச்ச நீதிமன்றம் வழங்கிய கெடு இன்றுடன் முடிவடைகிறது. மத்திய அரசிடமிருந்து எந்த அறிவிப்பும் வராத நிலையில், முதல்வர் எடப்பாடி தலைமையிலான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுவருகிறது.
இந்தக் கூட்டத்தில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்லம் அமைச்சர் ஜெயக்குமார், செங்கோட்டையன் உள்ளிட்ட அமைச்சர்கள் கலந்துகொண்டு ஆலோசனை நடத்திவருகின்றனர். இதில், மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவில்லை எனில், எவ்வாறான நடவடிக்கையை மத்திய அரசுக்கு எதிராக மேற்கொள்வது என்பதுகுறித்து ஆலோசனை நடத்தப்பட்டுவருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்