நெல்லை மாவட்டத்தில் உள்ள குளங்களில் அமலைச் செடிகளை அகற்றக்கோரி ஆட்சியர் அலுவலகத்துக்கு அமலைச் செடியை உடல் முழுவதும் சுற்றியபடி விவசாயி வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நெல்லை மாவட்டம் வண்ணார்பேட்டையைச் சேர்ந்தவர், சீனிவாசன். விவசாயியான இவர், ஜம்மு காஷ்மீர் நேஷனல் பேந்தர்ஸ் (தமிழ்நாடு) என்ற அமைப்பின் ஒருங்கிணைப்பாளராகவும் உள்ளார். நெல்லை மாவட்டத்தின் பல்வேறு குளங்கள் தூர் வாரப்படாமல் அமலைச் செடிகளின் ஆக்கிரமிப்பு களால் நிறைந்துள்ளன. அவற்றை தூர் வாரக்கோரி பலமுறை ஆட்சியரிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதனால் அதிருப்தியடைந்த விவசாயி சீனிவாசன் இன்று உடல் முழுவதும் அமலைச் செடிகளைக் கட்டிக்கொண்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிப்பதற்காக வந்தார். ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பாதுகாப்புக்காக இருந்த போலீஸார் அவரை உள்ளே நுழைய அனுமதிக்கவில்லை. அதனால், போலீஸாருடன் அவரும் அவருடன் வந்தவர்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். உடலில் சுற்றியபடியிருந்த அமலைச் செடிகளை அகற்றிய பின்னரே அவரை மனு அளிக்க அனுமதித்தனர்.
இது பற்றி விவசாயி சீனிவாசன் கூறுகையில், நெல்லை 10-வது வார்டில் உள்ள தாமிரபரணிகுளம் மற்றும் முருகன்குறிச்சி பகுதியில் உள்ள பொஸ்தா குளம் ஆகியவை முழுமையாக அமலைச் செடிகளால் சூழப்பட்டு சுகாதாரச் சீர்கேட்டுடன் காணப்படுகின்றன. அந்தக் குளத்தின் மூலம் சுமார் ஆயிரம் விவசாயக் குடும்பத்தினர் விவசாயம் செய்து வரும் நிலையில், குளத்தை தூர் வாராததால் தண்ணீர் இல்லாமல் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். மாவட்ட ஆட்சியரிடம் ஏற்கெனவே மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதனால்தான் உடலில் அமலைச் செடியுடன் வந்து குளத்தை தூர்வாருமாறு கோஷமிட்டேன்’’ என்றார்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்