புதுடெல்லி: காவிரி மேலாண்மை வாரியத்திற்கு பதில் காவிரி மேற்பார்வை ஆணையம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மெத்தம் 9 பேர் கொண்ட காவிரி மேற்பார்வை ஆணையம் அமைக்கப்படும் என்று நீர்வளத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. இதில் 5 முழு நேர உறுப்பினர்களும், மாநிலங்களைச் சேர்ந்த 4 பகுதி நேர உறுப்பினர்களும் இடம்பெறுவர். நீர்வளத்துறை அமைச்சகம் அமைச்சரவைக்கு அனுப்பிய விரைவில் மேலாண்மை வாரியம் என்ற சொல் இல்லை. காவிரி மேற்பார்வை ஆணையத்தை அமைப்பதைத் தவிர வேறு வழியில்லை என்று நீர்வளத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பை மேற்கோள் காட்டி நீர்வளத்துறை அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது. மார்ச் 29ம் தேதிக்குள் காவிரி மேற்பார்வை ஆணையத்தை அமைக்கவும் சாத்தியக்கூறுகள் இல்லை என்றும் நீர்வளத்துறை அமைச்கம் கூறியுள்ளது. காவிரி பிரச்சனையை தீர்க்க உச்சநீதிமன்றம் மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்திருந்தது. நீதிமன்றம் வழங்கிய காலக்கெடு வரும் 29ம் தேதியுடன் முடிகிறது குறிப்பிடத்தக்கது.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்