காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திடக்கோரி மத்திய அரசுக்கு, அ.தி.மு.க சார்பில் கடுமையான அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி 6 வார காலத்துக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, அ.தி.மு.க எம்.பி-க்கள், நாடாளுமன்றத்தின்முன் தொடர்ந்து 15 நாளாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதுகுறித்து, தமிழகச் சட்டப்பேரவையிலும் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.
'குதிரைப்பேரம் நடத்தும் இந்த அரசு, மத்திய அரசிடம் மண்டியிட்டுக் கிடக்கிறது. அதனால், நிச்சயமாகக் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்போ வதில்லை. இவர்கள், கமிஷன் வாங்குவது, கரப்ஷன் செய்வது போன்ற அடிப்படையில்தான் ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கின்றனர். அ.தி.மு.க ஊரையும் தமிழக மக்களையும் ஏமாற்றிவருகிறது' என ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.
இதற்குப் பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், 'காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க, அ.தி.மு.க அரசு மத்திய அரசிடம் கடுமையான அழுத்தம் கொடுத்துள்ளது. தமிழகம் சார்பில் இதுவரையிலும் எந்தக் கட்சிகளும் இவ்வாறான அழுத்தத்தை மத்திய அரசுக்குக் கொடுத்ததில்லை. அதனால், காவிரி மேலாண்மை வாரியம் நிச்சயம் அமைக்கப்படும்' என்றார்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்