தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகித்து வந்த தெலுங்கு தேசம் கட்சி பிரிந்து சென்றது துரதிருஷ்டமானது என்றும் இந்த முடிவு ஒருதலைபட்சமாக எடுக்கப்பட்டுள்ளது எனப் பா.ஜ.க தேசியத் தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
இது குறித்து சந்திர பாபுநாயுடுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், `ஆந்திர மக்களுக்கு எனது யுஹாதி திருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கி றேன். நீண்ட காலமாக தேசிய ஜனநாயகக் கூட்டணியில், அங்கம் வகித்து வந்த தெலுங்கு தேசம் கட்சி, பிரிந்து சென்றது துரதிருஷ்டமானது. மேலும், இந்த முடிவானது ஒருதலைபட்சமாக எடுக்கப்பட்டுள்ளது. அரசியல் கருத்துக்களின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. வளர்ச்சியின் அடிப்படையில் எடுக்கப்படவில்லை. இந்த முடிவு எனக்குப் பயத்தை உண்டாக்குகிறது. மாநிலங்களே முதன்மையானது என்ற அடிப்படையில், மாநில மக்களின் நலன் கருதி செயல்படுவர் பிரதமர்.
ஆந்திர மாநிலத்தின் வளர்ச்சியில் கவனம் செலுத்துவதுபோல், அரசியலைப் புரிந்துகொண்டு, அதனை நிதானமாக வழிநடத்தவேண்டும். மேலும், அனைவரையும் மேன்மை அடையச் செய்ய வேண்டும் என்பதில் பா.ஜ.க அரசு உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது' எனத் தெரிவித்துள்ளார்.
தெலுங்கு தேசம் கட்சியின், நீண்டநாள் கோரிக்கையான ஆந்திர மாநிலத்தின் தலைநகர் அமராவதிக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்குதல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை, 2018-ம் ஆண்டிற்கான பட்ஜெட் அறிவிப்பில் இடம்பெறவில்லை என்ற காரணத்தினால் பா.ஜ.க-வுடன் கடந்த 7-ம் தேதி அன்று கூட்ட ணியிலிருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்