img
img

காவிரிக்காக தமிழக எம்.பி-க்கள் ராஜினாமா செய்ய வேண்டும்
சனி 24 மார்ச் 2018 15:52:11

img

திருச்சியில் நேற்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வழக்கறிஞர்கள் அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட திருமாவளவன், வரும் பார்கவுன்சில் தேர்தலில் அக்கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களான பார்வேந்தன் உள்ளிட்டோரின் வெற்றிக்காகப் பாடுபடுவது உள்ளிட்டவற்றை விவாதித்தார். அடுத்து இனி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வழக்கறிஞர்கள் அணி, சமத்துவ வழக்க றிஞர்கள் சங்கம் என அழைக்கப்படும் என மேடையில் அறிவித்தார்.

முன்னதாக பத்திரிகையாளர்களைச் சந்தித்த திருமாவளவன்,``நியூட்ரினோ திட்டம் வேண்டாம் என்று விவசாயிகள் சொன்னார்கள். இந்தத் திட்டத்துக்கு அனுமதி வழங்கப்படாது எனத் தமிழக அரசும்  கூறியது. ஆனால், இப்போது மத்திய அரசு, மக்களை, இயற்கை வளத்தையும் பேரழிவுக்குள்ளாக்கும் நியூட்ரினோ திட்டத்தை செயல்படுத்த முடிவுசெய்துள்ளது. மத்திய அரசின் இந்த முடிவுக்கு எதிராக விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் தேனியில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. அந்த ஆர்ப்பாட்டத்தில் நானும் கலந்துகொள்கிறேன். இதேபோல், தமிழகத்தில் மத்திய அரசு செயல்படுத்த துடிக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக வரும் 27-ம் தேதி தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டையில் உண்ணாவிரதப் போராட்டம் நடக்கும் என்றார்.

காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றம், காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட விதித்த கெடு முடிவதற்கு இன்னும் சில தினங்களே உள்ளன. ஆனால், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால், மத்திய அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்  கூறியுள்ளார். அதே கருத்தை நானும் வலியுறுத்துகிறேன். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் அ.தி.மு.கவைச் சேர்ந்த 50 எம்.பி-க்கள் உள்பட தமிழகத்தைச் சேர்ந்த எம்.பி-க்கள் ராஜினாமா செய்ய வேண்டும்.

அப்படிச் செய்தால் அரசியல் அமைப்புச் சட்டத்தில் தாக்கத்தை உண்டாக்கும். அது அரசியல் சட்டத்திற்குச் சவாலாக இருக்கும். உலகளவில் இதுகுறித்த விவாதங்கள் உண்டாகும். உள்ளாட்சித் தேர்தல் நடத்தாததை காரணம் காட்டி தமிழகத்துக்குத் தர வேண்டிய ரூ.1,950 கோடியை மத்திய அரசு தராமல் இருப்பது கண்டனத்துக்கு உரியது.  தமிழக அரசு உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்த முன்வர வேண்டும். தமிழகத்தில் காவலர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் அதுகரித்துள்ளன. இது தொடர்பாக விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும். காவலர் சங்கம் அமைக்க அனுமதிக்க வேண்டும். போலீஸாருக்கு 8 மணி நேரம் வேலை என்பதை உறுதிப்படுத்த வேண்டும்' என்றார்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்

தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன

மேலும்
img
இந்தியாவில் சூரிய சக்தியின் பயன்பாடு அதிகரிப்பு பிரதமர் மோடியை பாராட்டிய பில் கேட்ஸ்

நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு

மேலும்
img
தமிழகத்தில் மர்ம காய்ச்சல் ஒரே நாளில் 100 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி பீதியில் மக்கள்

சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்

மேலும்
img
மஸ்கட் ஏர்போர்ட்டில் இருந்த விமானத்தில் திடீர் தீ விபத்து- 14 பயணிகள் படுகாயம்

மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

மேலும்
img
9 பேரை கொன்ற ராணுவவீரருக்கு 18 ஆண்டுகள் சிறை

பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img