சசிகலா தன் கணவர் நடராசன் இறுதிச் சடங்குக்காகப் பெங்களூரு சிறையிலிருந்து கடந்த 20-ம் தேதி தஞ்சாவூர் வந்தவர், நடராசனின் இறுதிச் சடங்கை முடித்துவிட்டு அங்கேயே தங்கியிருக்கிறார். சசிகலா தஞ்சாவூருக்கு வந்து மூன்று நாள்கள் ஆகின்றன.
இன்று சசிகலாவுக்கு ஆறுதல் கூறுவதற்காகத் தி.மு.க-வின் ஒரத்தநாடு தொகுதி எம்.எல்.ஏ ராமசந்திரன், தேர்தல் பணிக்குழு தலைவர் எல்.கணேசன் இருவரும் தனித் தனியாக வந்தார்கள். அப்போது மாடியில் இருந்திருக்கிறார் சசிகலா. யார் வந்தாலும் கீழே வந்து பார்ப்பதை வழக்கமாக வைத்திருக்கும் சசிகலா இவர்கள் வந்ததும் மாடிக்கே வரச் சொன்னாராம். முதலில் ராமசந்திரன் பார்த்துவிட்டு வெளியே வந்தவர் மீடியாவிடம் எதுவும் பேசாமல் சென்றுவிட்டார்.
அடுத்து கொஞ்ச நேரத்தில் உள்ளே சென்ற எல்.கணேசன் கண்கலங்கியவாறே மாடிக்குச் சென்றார். அங்கு சசிகலாவிடம் 20 நிமிடங்களுக்கு மேல் பேசி விட்டு வந்தவர் செய்தியாளர்களிடம் நடராசன் எனக்கு உடன் பிறவா சகோதரர். கணவர் இறந்ததில் பெரும் வருத்தத்தில் இருக்கிறார் சசிகலா. அவருக்கு ஆறுதல் சொன்னேன். கொஞ்சம் கொஞ்சமாகத் தேறி விடுகிறேன் என்றிருக்கிறார் எனச் சொல்லிவிட்டு விட்டு கிளம்பினார்.
காலையிலிருந்து தினகரன், திவாகரன், விவேக், நடராசன் தம்பி பழனியப்பன் ஆகியோரிடம் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார் சசிகலா. திருச்சி யிலிருந்து வந்திருந்த ஆடிட்டர் மற்றும் வக்கீல் ஒருவரும் இந்த ஆலோசனையில் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. அவர்கள் மதியத்துக்கு மேல்தான் வெளியே சென்றனர். நடராசனின் சொத்து பங்கீடு குறித்து ஆடிட்டரிடம் சசிகலா ஆலோசித்ததாகச் சொல்கிறார்கள். இடையில் விவேக் கொஞ்சம் நேரம் வெளியே சென்றுவிட்டு மீண்டும் வீட்டுக்கு வந்தார். அப்போது சற்று கோபத்துடன் வீட்டுக்குள்ளேயிருந்து வெளியே வந்தார் திவாகரன். அவரைப் பார்த்ததும் விவேக் சற்று தயங்கியபடியே உள்ளே சென்றார்.
விறுவிறுவெனச் சென்ற திவாகரன் சற்று தூரத்தில் நிறுத்தப்பட்டிருந்த காரில் ஏறி தானே ஓட்டியவாறு கிளம்பிச் சென்றார். கொஞ்ச நேரத்தில் தினகரனின் டிரைவர் அண்ணனுக்கு சோடா வேணுமாம் வாங்கிவிட்டு வருகிறேன் என வெளியே நின்றுகொண்டிருந்தவரிடம் லேசான குரலில் காதில் சொல்லிவிட்டுச் சென்றார். அதே வேகத்தில் சோடாவோடு திரும்பி வீட்டுக்குள் சென்றார். உயர்ரக கார்களில் உறவினர்கள் வருவதும் போவதுமாக இருந்தார்கள்.
உறவுக்கார பெண்கள் முறைகள் செய்வதற்காவும் வந்து செல்கிறார்கள் அவர்களிடம் எல்லாம் சோகமாகவே பேசுகிறாராம் சசிகலா. வெளியே வந்த அந்தப் பெண்கள் சசிகலா, கணவருடன் சேர்ந்து வாழவில்லை என்றாலும் கணவன் இழப்பு என்பது பேரிழப்புதான். அது அப்படியே அத்தாச்சி முகத்தில் தெரிகிறது எனப் பேசியபடி சென்றார்கள். "சசிகலா சோகத்தில் இருந்தாலும் வெளியில் இருக்கும் 10 நாள்களையும் அர்த்தமுள்ளதாக மாற்றுவதோடு ஆட்சியிலும் மாற்றம் கொண்டு வந்து இழந்த அதிகாரத்தை மீட்க வேண்டும் என்று சூளுரைத்து இருக்கிறார். அது நோக்கியே அவரின் செயல்பாடு இருக்கிறது" எனத் தெரிவிக்கிறார்கள் உள் விவரம் அறிந்தவர்கள்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்