அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சைப்பெற்றப் பகுதியில் சிசிடிவி கேமராக்கள் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டதாகப் பிரதாப் ரெட்டி தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்ட அப்போலோ மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் ஜெயலலிதா மரணம் குறித்த கேள்விகள் எழுப்பப்பட்டன. அதற்குப் பதிலளித்த பிரதாப் ரெட்டி ‘ஜெயலலிதா மரணம் தொடர்பாக எங்களிடம் இருந்த அனைத்து ஆவணங்களையும் விசாரணை ஆணையத்திடம் கொடுத்துள்ளோம்.
மருத்துவமனைக்கு வந்தபோது ஜெயலலிதா உடல்நிலை மிகவும் மோசமடைந்திருந்தது. வார்டு பாய் முதல் மருத்துவக் குழு வரை ஜெயலலிதாவுக்கு சிறப்பான சேவையைச் செய்தது. சிறப்பான சிகிச்சையால் ஜெயலலிதாவின் உடல்நிலை சற்று தேறி வந்தது. உடல்நிலையில் நல்ல மாற்றம் காரணத்தால்தான் தீவிர சிகிச்சை பிரிவிலிருந்து சாதாரண வார்டுக்கு ஜெயலலிதா மாற்றப்பட்டார். ஆனால், திடீர் மாரடைப்பு காரணமாக ஜெயலலிதா காலமானார்.
அப்போலோவில் ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது யார் யாரெல்லாம் சந்தித்தார்கள் என்பது பற்றி செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். அதற்குப் பதிலளித்த பிரதாப் ரெட்டி... ‘எங்கள் மருத்துவமனையில் பொதுவாக ஒரு முறையைப் பின்பற்றுவோம். உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருக்கும் நோயாளிகளைப் பார்க்க யாருக்கும் அனுமதி அளிக்க மாட்டோம். அவர்களுக்கு நோய்த் தொற்று ஏற்படும். நெருங்கிய உறவினர்களைத் தவிர, வேறு யாரையும் நோயளிகளைச் சந்திக்க அனுமதிக்க மாட்டோம். ஜெயலலிதாவின் நெருங்கிய உறவினர்கள் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் சிலருக்கு ஜெயலலிதாவை சந்திக்க மருத்துவர்கள் அனுமதித்தனர்’ என்றார்.
விசாரணை ஆணையத்தில் ஜெயலலிதா சிகிச்சை குறித்த சிசிடிவி பதிவுகள் ஏதேனும் சமர்பிக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். அதற்குப் பதிலளித்த பிரதாப் ரெட்டி, ‘நாங்கள் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற வளாகத்தின் சிசிடிவி கேமராக்களை ஸ்விட்ச் ஆஃப் செய்துவிட்டோம். ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டதும் அந்த வார்டில் இருந்த மற்ற நோயாளிகளை வேறு வார்டுகளுக்கு மாற்றினோம். அங்கிருந்த 24 அறைகளில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட ஓர் அறை மட்டுமே செயல்பாட்டில் இருந்தது. இதனால், அப்பகுதி சிசிடிவி பதிவுகளைத் தேவையில்லாமல் வேறு யாரும் பார்த்துவிடக் கூடாது என்பதற்காக அழித்துவிட்டார்கள்’ என்றார்.
முதலில் சிசிடிவி கேமராக்களை ஸ்விச் ஆஃப் செய்துவிட்டார்கள் என்று கூறிய பிரதாப் ரெட்டி இறுதியில் சிசிடிவி பதிவுகளை அழித்துவிட்டார்கள் (removed footages) என்று முன்னுக்கு முரணாகக் கூறியது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்