சென்னை வேளச்சேரி 200 அடி சாலையில் போக்குவரத்து போலீஸாருடன் இளைஞர்கள் சிலர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர். அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகிவருகிறது.
சமூக வலைதளத்தில் போக்குவரத்து போலீஸாருடன் இளைஞர்கள் சிலர் வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ வைரலாகிவருகிறது. சினிமாவில் வரும்காட்சிகளைப் போல போக்குவரத்து போலீஸாரின் கைகளை மடக்கிப்பிடிக்கிறார் ஓர் இளைஞர். இளைஞரிடம் சிக்கிய போலீஸாரை, சக போலீஸார் மீட்கின்றனர். அடுத்து, போக்குவரத்து போலீஸாரிடம் இளைஞர்கள் தகராறு செய்கின்றனர். அந்த வீடியோவில், `போலீஸாரிடம் தகராறு செய்பவர்கள், எதற்கு நீங்கள் அடிக்கிறீர்கள், சம்பளம் வாங்கும் நீங்கள் எதற்காக லஞ்சம் வாங்குகிறீர்கள், லஞ்சம் வாங்க ஏன் நாய் மாதிரி அலைகிறீர்கள் என்று பேசும் ஆடியோ தெளிவாகக் கேட்கிறது. அதற்கு, போலீஸார், கலைந்து செல்லுங்கள்' என்று சொல்கின்றனர்.
இதுகுறித்து கூடுதல் கமிஷனர் (போக்குவரத்து) அருணிடம் கேட்டதற்கு, ``அந்த வீடியோவில் உள்ள இளைஞர்களில் ஒருவர், ஹெல்மெட் அணியாமல் அந்தப் பகுதியில் சென்றுள்ளார். இதைப்பார்த்த சப் இன்ஸ்பெக்டர் ஒருவர், அந்த இளைஞருக்கு அபராதம் விதித்துள்ளார். அந்த ரசீதை இளைஞர் கிழித்தெறிந்ததோடு தேவையில்லாமல் போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
அவர்களை போலீஸார் சமரசப்படுத்தியபோதும் இளைஞர்களில் சிலர் அநாகரிகமாக நடந்துள்ளனர். மேலும், நடந்த சம்பவத்தை வீடியோவாகப் பதிவு செய்து போலீஸாருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடந்துவருகிறது. விசார ணைக்குப் பிறகு தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்