இரண்டு நாள் விடுமுறைக்குப் பின் கூடிய மக்களவையில், எதிர்க்கட்சிகளின் கடும் அமளியால், நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைக்க ப்பட்டுள்ளன. மோடி அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் இன்றும் நிறைவேற்றப்படவில்லை.
இந்நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை, நாடாளுமன்ற கூட்டுத்தொடரை நடத்த விடமாட்டோம் என அ.தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து 11 வது நாளாக அமளியில் ஈடுபட்டுவருகின்றனர். இதுகுறித்து எம்.பி தம்பிதுரை பேசுகையில், ``காவிரி மேலாண்மை வாரியம் அமைப்போம் என மத்திய அரசு நாடாளுமன்றத்தில் வாக்குறுதி தர வேண்டும். அதற்குப் பிறகுதான் எந்த அலுவல்கள் இருந்தாலும் நாங்கள் ஒத்துழைப்போம். அதுவரையிலும் ஒத்துழைக்க மாட்டோம்'’ என்றார்.
மேலும், மத்திய அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், ``நாங்கள் என்ன சொல்கிறோம் முதலில், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்த உறுதிமொழியை மத்திய அரசு தரட்டும். பிறகு அவை நடக்கட்டும். பிறகு என்ன தீர்மானம் வேண்டுமானாலும் கொண்டுவரட்டும். எங்களுக்குக் கவலை இல்லை. எங்களுக்குக் காவிரி மேலாண்மை அமைக்க வேண்டும்'’ என்றார்.
கடந்த ஒருவாரமாகத்தான் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் மற்றும் டி.டி.எஸ் கட்சிகள் மத்திய அரசுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் குறள் கொடுத்து வருகிறது. அவர்களை அழைத்துப் பேசிய மத்திய அரசு, கடந்த 5-ம் தேதியிலிருந்து காவிரி மேலாண்மை வாரியத்துக்காகப் போராடி வரும் உங்களை ஏன் மத்திய அரசு பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை, மத்திய அரசுக்கு அ.தி.மு.க மேல் அக்கறையில்லையா என்ற கேள்விக்கு 'அந்த அக்கறையைக் கொண்டு வருவதற்காகத்தான் தொடர்ந்து போராடி வருகிறோம்' என்று தம்பிதுரை கூறினார்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்