மத்திய அரசுக்கு எதிராகக் கொண்டு வரும் நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு, வரும் 29-ம் தேதி வரை காத்திருப்போம் எனத் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தமிழக சட்டசபையில் தெரிவித்தார்.
தமிழக பட்ஜெட் கடந்த 15-ம் தேதி அன்று தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட் தொடர்பான விவாதத்துக்காகத் தமிழக சட்டசபை இன்று காலை மீண்டும் கூடி யது. இதில், கலந்துகொண்ட எதிர்க்கட்சித் தலைவர் மு.க ஸ்டாலின், 'மத்திய அரசு மீதான நம்பிக்கை இல்லா தீர்மானத்தை அ.தி.மு.க ஆதரிக்க வேண்டும்' என்று கூறினார். இதற்குப் பதிலளித்த, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ``மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது முடிவு எடுக்க வரும் 29-ம் தேதி வரை காத்திருப்போம். எந்த முன்னேற்றமும் இல்லை என்றால் அனைவரும் ஒன்றுகூடி அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி முடிவு செய்வோம்'’ என்றார்.
இரண்டு நாள் விடுமுறைக்குப் பின் கூடிய மக்களவையில், சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சியும் ஜெகன்மோகன் ரெட்டி தலை மையிலான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியும் ஒன்றிணைந்து எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 50 எம்.பி-க்களின் கையெழுத்தைப் பெற்று, பா.ஜ.க அரசுமீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை நிறைவேற்ற முனைப்பு காட்டிவருகிறது.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்