img
img

தமிழகத்துக்கு நல்ல செய்தி..
வியாழன் 29 செப்டம்பர் 2016 16:47:07

img

சுப்ரீம் கோர்ட் உத்தரவுப் படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் பணியை தொடங்கியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. காவிரியில் இருந்து தண்ணீர் திறந்து விட கர்நாடக அரசு மறுத்து வரும் நிலையில், இது தொடர்பாக வழக்கை செப். 20ம் தேதி விசாரித்த உச்ச நீதிமன்றம் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு நான்கு வாரங்களுக்குள் அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. Central government starts to set up Cauvery Management Board இந்நிலையில், காவிரி பிரச்சனைத் தொடர்பாக மத்திய அமைச்சர் உமாபாரதி தலைமையில் இரு மாநில முதல்வர்கள் கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற்றது. கர்நாடகத்தின் சார்பில் அம்மாநில முதலமைச்சர் சித்தராமையாவும் தமிழகத்தின் சார்பில் பொதுப்பணித் துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் உறுதியான எந்த முடிவும் எட்டப்படவில்லை. என்றாலும், காவிரி பிரச்சனை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நீர்வளத்துறை செயலாளர் சசிசேகர், "உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளபடி 4 வாரத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும், அதற்கான வேலைகள் தொடங்கப்பட்டுவிட்டது" என்றும் தெரிவித்துள்ளார்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்

தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன

மேலும்
img
இந்தியாவில் சூரிய சக்தியின் பயன்பாடு அதிகரிப்பு பிரதமர் மோடியை பாராட்டிய பில் கேட்ஸ்

நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு

மேலும்
img
தமிழகத்தில் மர்ம காய்ச்சல் ஒரே நாளில் 100 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி பீதியில் மக்கள்

சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்

மேலும்
img
மஸ்கட் ஏர்போர்ட்டில் இருந்த விமானத்தில் திடீர் தீ விபத்து- 14 பயணிகள் படுகாயம்

மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

மேலும்
img
9 பேரை கொன்ற ராணுவவீரருக்கு 18 ஆண்டுகள் சிறை

பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img