img
img

அசத்தலான 5 தமிழ் இலவச இணைய மென்பொருள்! - அறிமுகப்படுத்திய தமிழக அரசு
வியாழன் 15 மார்ச் 2018 16:35:09

img

ஐந்து மென்பொருள்கள் அடங்கிய தமிழ் இணைய மென்பொருள் தொகுப்பை, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிமுகம் செய்து வைத்தார்.

தமிழ் இணைய கல்விக்கழகத்தினால், தமிழ் இணைய மென்பொருள் உருவாக்கும் திட்டத்தின் கீழ், 5 மென்பொருள் அடங்கிய தொகுப்பு, தமிழக அரசு சார்பில் உருவாக்கப்பட்டது.  தமிழிணையம் அகராதித் தொகுப்பு, தமிழிணையம் தரவுப் பகுப்பாய்வு, தமிழிணையம் கருத்துக்களவு ஆய்வு, தமிழிணையம் சொற்றொடர் தொகுப்பு, தமிழிணையம் பிழை திருத்தி, ஆகிய 5 மென்பொருள்கள் கொண்ட தொகுப்பு துவங்கப்பட்டுள்ளது.

இந்த மென் பொருள்கள்மூலம் தமிழ் சொல்லுக்கு பொருள் அறிதல், தமிழில் எழுத்துப் பிழைகளைக் கண்டறிந்து சரிசெய்தல், தமிழ்லெக்ஸிகன், கதிரை வேல் பிள்ளை அகராதி போன்ற அகராதிகளில் உள்ள பொருள் அறிதல், சொற்களைத் தொகுத்து வழங்குதல்,வகைப்படுத்துதல் போன்றவற்றை மேற்கொள்ளலாம். இது தட்டச்சர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள் என அனைவருக்கும் மிகவும் உதவியாக இருக்கும். தமிழ் கல்விக் கழக இணையதளத்தில் தேவையான தகவல்களைப் பதிவுசெய்து, இந்த மென்பொருள்களை இலவசமாகப் பெற்றுக்கொள்ளலாம்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்

தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன

மேலும்
img
இந்தியாவில் சூரிய சக்தியின் பயன்பாடு அதிகரிப்பு பிரதமர் மோடியை பாராட்டிய பில் கேட்ஸ்

நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு

மேலும்
img
தமிழகத்தில் மர்ம காய்ச்சல் ஒரே நாளில் 100 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி பீதியில் மக்கள்

சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்

மேலும்
img
மஸ்கட் ஏர்போர்ட்டில் இருந்த விமானத்தில் திடீர் தீ விபத்து- 14 பயணிகள் படுகாயம்

மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

மேலும்
img
9 பேரை கொன்ற ராணுவவீரருக்கு 18 ஆண்டுகள் சிறை

பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img