img
img

`நெருக்கடியில் மத்திய அரசு; வீழ்த்த வாருங்கள்' - எதிர்க்கட்சிகளுக்கு வைகோ அறைகூவல்
வியாழன் 15 மார்ச் 2018 16:30:40

img

மத்தியில் ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க அரசு அடுத்த ஓராண்டு காலத்துக்கு நீடிக்காது. விரைவிலேயே அரசு கவிழும் வாய்ப்பு இருப்பதாக ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார்.

நெல்லையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வருகை தந்துள்ள வைகோ செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,``மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசின் ஆட்சியிலிருந்து தெலுங்கு தேசம் கட்சி வெளியேறியுள்ளது. அதனால் மத்திய அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டு உள்ளது. தற்போது மத்திய அரசுக்கு 273 எம்.பி-க்கள் ஆதரவு மட்டுமே இருக்கிறது. பெரும்பான்மையை விடவும் ஒரு எம்.பி மட்டுமே அதிகமாக  உள்ளது. 

பாரதிய ஜனதா கட்சியை வளர்த்ததில் அத்வானிக்கும் முக்கியப் பங்கு இருக்கிறது. எனக்கு அத்வானியின் கொள்கைகளில் கருத்து வேறுபாடு இருந்தாலும், நாடு முழுவதும் கட்சியைக் கட்டி எழுப்பியவர் அவர். ஆனால், கட்சியை வளர்த்த அவருக்கு மோடி உரிய மரியாதை கொடுப்பதில்லை என்கிற புகார் உள்ளது. அதேபோல, கட்சிக்குள் பலருக்கும் மோடிமீது அதிருப்தி இருக்கிறது. அதனால், கட்சியில் விரைவில் பிளவு ஏற்படும் வாய்ப்பு உள்ளதால், மத்திய அரசு விரைவில் கவிழும்.

பாரதிய ஜனதா கட்சி அழிவை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. ஆளுங்கட்சியாக இருக்கும் ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற இரு எம்.பி இடைத்தேர்தல்களில் பா.ஜ.க தோல்வியைச் சந்தித்தது. மத்தியப் பிரதேசத்து எம்.எல்.ஏ இடைத்தேர்தலிலும் தோல்வியடைந்தது. தற்போது உத்தரப்பி ரதேச இரு எம்.பி இடைத்தேர்தலிலும் பீகார் எம்.பி இடைத்தேர்தலிலும் தோல்வியைச் சந்தித்துள்ளது. அதனால் மத்திய அரசு அழிவின் பாதையில் செல்கிறது. 

மத்திய அரசு நெருக்கடியான சூழலில் இருக்கிறது. தற்போது அ.தி.மு.க-வின் 37 எம்.பி-க்களின் ஆதரவு மத்திய அரசுக்குத் தேவைப்படுகிறது. இது நமக்கு மிகப்பெரிய வாய்ப்பாக அமையும் என்பதால் தமிழக அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது, மீத்தேன் திட்டத்தை எதிர்ப்பது போன்ற வற்றில் கூடுதல் அழுத்தம் கொடுத்து அவற்றை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய பா.ஜ.க அரசு நெருக்கடியான நிலையில் இருப்ப தால், அனைத்து எதிர்க்கட்சியினரும் ஒருங்கிணைந்து மத்திய அரசை வீழ்த்தப் பாடுபட வேண்டும்’’ எனக் கேட்டுக்கொண்டார். 

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்

தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன

மேலும்
img
இந்தியாவில் சூரிய சக்தியின் பயன்பாடு அதிகரிப்பு பிரதமர் மோடியை பாராட்டிய பில் கேட்ஸ்

நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு

மேலும்
img
தமிழகத்தில் மர்ம காய்ச்சல் ஒரே நாளில் 100 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி பீதியில் மக்கள்

சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்

மேலும்
img
மஸ்கட் ஏர்போர்ட்டில் இருந்த விமானத்தில் திடீர் தீ விபத்து- 14 பயணிகள் படுகாயம்

மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

மேலும்
img
9 பேரை கொன்ற ராணுவவீரருக்கு 18 ஆண்டுகள் சிறை

பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img