img
img

உஷா மரணத்துக்காகப் போராடி சிறை சென்ற 27 பேருக்கு ஜாமீன்!
புதன் 14 மார்ச் 2018 18:57:09

img

போலீஸாரால் எட்டி உதைக்கப்பட்டதால் சாலையில் விழுந்து பலியான உஷாவுக்காகப் போராடியதற்காக போலீஸாரால் கைது செய்யப்பட்ட 27 பேருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது திருச்சி நீதிமன்றம்.

கடந்த 7ம் தேதி மாலை ​திருச்சி திருவெறும்பூர் கணேசா ரவுண்டானா அருகே இருசக்கர வாகனத்தில் பயணித்த தஞ்சாவூர் மாவட்டம் சூலமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த ராஜா-உஷா தம்பதியினரை போக்குவரத்துக் காவல் ஆய்வாளர் காமராஜ் எட்டி உதைத்த சம்பவத்தில் கர்ப்பிணி உஷா கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவத்தை கண்டித்து அப்பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் திருச்சி- தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பல மணிநேரம் ஸ்தம்பித்தது. இந்நிலையில் காவல்துறைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் வாகனங்கள், அரசுப் பேருந்துகள் அடித்து நொறுக்கப்பட்டது.

இதனால் போலீஸார், போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தது. இதில் 14 பேர் காயமடைந்தனர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்டதாக 27 பேரை காவல்துறை கைது செய்து சிறையில் அடித்தது அவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை முன் வைக்கப்பட்டது. மேலும், அவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் வாங்க வேண்டும் என்றார்கள். இந்நிலையில் கைது செய்யப்பட்டவர்கள் மீதான ஜாமீன் கோரிய வழக்கு திருச்சி மாவட்ட நீதிமன்ற நீதிபதி குமரகுரு முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. கைது செய்யப்பட்ட 27 பேர் சார்பாக திருச்சிராப்பள்ளி வழக்கறிஞர்கள் சங்க தலைவர் பன்னீர்செல்வம் வாதாடினார்.

விசாரணைக்குப் பின் கைது செய்யப்பட்டு  சிறையில் இருக்கும்  27 பேருக்கும் தலா ரூ. 500 பிணையாகச் செலுத்திவிட்டு ஜாமீன் வழங்கி உத்தர விட்டார். மேலும், காவல் ஆய்வாளர் காமராஜ் மனு மீதான விசாரணையை நீதிபதி குமரகுரு, வரும் 16-ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார். இந்நிலையில் 27 பேர் மீதான ஜாமீன் மனு மீதான விசாரணையில் போலீஸ் ஆட்சேபனை தெரிவித்ததாகவும், அதனால் மாலைவரை வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது என்கிற தகவல் வெளியானதால் நீதிமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இந்தத் தகவலை போலீஸார், கைது செய்யப்பட்டவர்களுக்காக ஜாமீன் மனு விசாரணையில் போலீஸ் தரப்பு ஆட்சேபனை தெரிவிக்கவில்லை என்று மறுக்கிறார்கள்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்

தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன

மேலும்
img
இந்தியாவில் சூரிய சக்தியின் பயன்பாடு அதிகரிப்பு பிரதமர் மோடியை பாராட்டிய பில் கேட்ஸ்

நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு

மேலும்
img
தமிழகத்தில் மர்ம காய்ச்சல் ஒரே நாளில் 100 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி பீதியில் மக்கள்

சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்

மேலும்
img
மஸ்கட் ஏர்போர்ட்டில் இருந்த விமானத்தில் திடீர் தீ விபத்து- 14 பயணிகள் படுகாயம்

மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

மேலும்
img
9 பேரை கொன்ற ராணுவவீரருக்கு 18 ஆண்டுகள் சிறை

பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img