உத்தரப்பிரதேச மக்களவைத் தொகுதிகள் இடைத்தேர்தலில் முன்னிலையில் உள்ள பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் சமாஜ்வாதி கட்சிகளுக்கு மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேசத்தில் நடந்துமுடிந்த சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க. வெற்றிபெற்றதைத் தொடர்ந்து அம்மாநிலத்தின் கோரக்பூர் தொகுதி எம்.பியான யோகி ஆதித்யநாத்தை முதல்வராக்கியது. அதேபோல், புல்பூர் தொகுதி எம்.பியாக இருந்த கேசவ் பிரசாத் மௌரியா துணை முதலமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார். அவர்கள் இருவரும் தங்களது எம்.பி. பதவிகளை ராஜிநாமா செய்ததைத் தொடர்ந்து, அந்தத் தொகுதிகளுக்குக் கடந்த 11-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.
22 வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் யோகி ஆதித்யநாத்தின் கோரக்பூர் தொகுதியில் சமாஜ்வாதிக் கட்சியின் பிரவீன்குமார் நிஷாத் 2,93,153 வாக்குகளுடன், பா.ஜ.கவின் உபேந்திர தத் சுக்லாவை விட 25,870 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார். அதேபோல், துணை முதலமைச்சர் கேசவ் பிரசாத் மௌரியாவின் தொகுதியான புல்பூர் தொகுதியில் 25வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் சமாஜ்வாதிக் கட்சி வேட்பாளர் நாகேந்திர பிரதாப் சிங் படேல், 2,71,752 வாக்குகளுடன், பா.ஜ.க. வேட்பாளர் கௌஷ்லேந்திர சிங் படேலை விட 38,498 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார்.
இந்தநிலையில், உத்தரப்பிரதேச இடைத்தேர்தலில் முன்னிலை பெற்றுள்ள பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாதிக் கட்சிகளுக்கு திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்குவங்க முதலமைச்சருமான மம்தா பானர்ஜி வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள மம்தா பானர்ஜி, ``சிறந்த வெற்றியைப் பெற்றுள்ள மாயாவதி (பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர்) மற்றும் அகிலேஷ் யாதவ் (சமாஜ்வாதிக் கட்சித் தலைவர்) ஆகியோருக்கு வாழ்த்துகள். முடிவின் தொடக்கம் ஆரம்பித்துவிட்டது’’ என்று குறிப்பிட்டுள்ளார். இது உத்தரப்பிரதேசத்தை ஆளும் பா.ஜ.கவுக்குப் பெரும் பின்ன டைவாகக் கருதப்படுகிறது.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்