தேனி மாவட்டம், குரங்கணி மலைப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கி ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த தம்பதி உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் போடி அருகே உள்ள குரங்கணி மலைப்பகுதியில் மலையேறும் பயிற்சிக்காக ஈரோட்டிலிருந்து பிரபு (30), கொல்லம்பாளையம் பகுதியைச் சேர்ந்த சபிதா (35), சபிதாவுடைய மகள் நேகா (9), சித்தோடு பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் (30), கவுந்தப்பாடியைச் சேர்ந்த விவேக் (32), விகேக்கின் மனைவி திவ்யா (25), தமிழ்ச்செல்வன் (24), கண்ணன் (26) என மொத்தம் 8 பேர் சென்றுள்ளனர். இந்த மலையேறும் பயிற்சியை tour de holiday என்னும் அமைப்பைச் சேர்ந்தவரும் இந்தத் தீ விபத்தில் பாதிக்கப்பட்டுள்ளவருமான பிரபு என்பவர்தான் ஏற்பாடு செய்திருக்கிறார்.
இவர்கள் அனைவரும் கடந்த வெள்ளிக்கிழமை இரவு சென்னிமலையிலிருந்து ஒரு கேப் மூலமாகத் தேனி மாவட்டம் போடிக்குச் சென்றுள்ளனர். பின்னர் அங்கிருந்து குரங்கணி மலைப்பகுதியில் மலையேறும் பயிற்சியில் ஈடுபட்டிருக்கின்றனர். பயிற்சியின்போது தீயின் புகைச்சலை உணர்ந்தும் எதையும் பொருட்படுத்தாமல் இருந்திருக்கின்றனர். அடுத்தடுத்து காட்டுத்தீ பரவ அதிர்ந்துபோனவர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் நிலைகுலைந்து ஆளுக்கொரு திசையில் ஓடியிருக்கின்றனர். அந்தவகையில், காட்டுத்தீயில் சிக்கி கவுந்தப்பாடியைச் சேர்ந்த விவேக், திவ்யா மற்றும் தமிழ்ச்செல்வன் ஆகிய மூவரும் உயிரிழந்ததாக அதிகாரபூர்வமான தகவல் வெளியாகியிருக்கிறது. காவல்துறை அதிகாரிகள் அதை உறுதிப்படுத்தியி ருக்கின்றனர். மீதமுள்ளவர்களும் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இதில் விவேக் மற்றும் திவ்யா ஆகிய இருவருக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்புதான் காதல் திருமணம் நடந்திருக்கிறது. விவேக் துபாயிலுள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் இன்ஜினீயராகப் பணியாற்றி வந்திருக்கிறார். அவரின் மனைவியான திவ்யா எம்.பில் முடித்துவிட்டு பெங்களூருவிலுள்ள ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து வந்திருக்கிறார். இவர்களுடைய திருமணத்தை முன்னின்று நடத்திய நண்பர்களான தமிழ்ச்செல்வன் மற்றும் கண்ணன் ஆகிய நால்வரும் சேர்ந்துதான் இந்தப் பயணத்துக்குச் சென்றிருக்கின்றனர். இவர்கள் 4 பேரும் ஈரோட்டை அடுத்த கவுந்தப்பாடியைச் சேர்ந்தவர்கள். அதில் 3 பேர் உயிரிழந்தும் ஒருவர் உயிருக்குப் போராடி வருவதுமான தகவலை அறிந்து அப்பகுதிவாசிகள் மிகுந்த வருத்தத்தில் இருக்கின்றனர்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்