img
img

வெளிநாட்டுப் பணம் எப்படி வந்தது? - சுப.உதயகுமாருக்கு அமலாக்கத்துறை சம்மன்
திங்கள் 05 மார்ச் 2018 18:29:20

img

அணுஉலையால் கிராமப் பகுதிக்கு ஆபத்து ஏற்படும். எனவே, அணுஉலைகளை மூட வேண்டும் எனக் கூறி, நெல்லை மாவட்டம் இடிந்தகரையில் சில ஆண்டுகளுக்கு முன் போராட்டம் நடைபெற்றது. அணு உலைக்கு எதிராக  நடந்த இப்போராட்டத்தின் காரணகர்த்தா, போராட்டக் குழு ஒருங்கி ணைப்பாளராக அறியப்படுபவர்,  சுப.உதயக்குமார். 

கூடங்குளம் அணு உலைக்கு எதிரான இவரது போராட்டம், இந்தியாவை மட்டுமல்ல, உலகம் முழுவதையும் திரும்பிப்பார்க்க வைத்தது. அரசுக்கு கூடங்குளம் அணு உலைக்கு எதிரான இவரது போராட்டம், இந்தியாவை மட்டுமல்ல, உலகம் முழுவதையும் திரும்பிப்பார்க்க வைத்தது. அரசுக்கு எதிரான இவரது போராட்டம், ஒருகட்டத்தில் வீரியமடைந்தாலும், பின்னாளில் அவரது போராட்டத்தை அரசு முடக்கியது. எனினும், அணுஉலைகளுக்கு எதிரான போராட்டத்தை சுப.உதயகுமார் தொடர்ந்து மேற்கொண்டுவருகிறார். முன்னதாக போராட்டக் காலத்தின்போது, வெளிநாடுகளிலிருந்து நிதியுதவி பெறுவதாகக் கூறி, இவரது வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன. 

மேலும், அவர் மீது வழக்குப்பதிவு செய்து அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டுவருகிறது. இந்நிலையில், 'இந்த வழக்கில் ஆஜராக வேண்டும்' என உதயகுமாருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. அதன்படி, சென்னை கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில், நாளை காலை 11 மணிக்கு ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. 'ஆஜராகும்போது, தகுந்த ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்' எனவும் அமலாக்கத்துறை உத்தரவிட்டுள்ளது.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்

தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன

மேலும்
img
இந்தியாவில் சூரிய சக்தியின் பயன்பாடு அதிகரிப்பு பிரதமர் மோடியை பாராட்டிய பில் கேட்ஸ்

நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு

மேலும்
img
தமிழகத்தில் மர்ம காய்ச்சல் ஒரே நாளில் 100 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி பீதியில் மக்கள்

சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்

மேலும்
img
மஸ்கட் ஏர்போர்ட்டில் இருந்த விமானத்தில் திடீர் தீ விபத்து- 14 பயணிகள் படுகாயம்

மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

மேலும்
img
9 பேரை கொன்ற ராணுவவீரருக்கு 18 ஆண்டுகள் சிறை

பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img