img
img

திருமணம் செய்வதாக கூறி பலரை ஏமாற்றிய நடிகை ஸ்ருதி
சனி 03 மார்ச் 2018 16:20:49

img

கோவை: திருமணம் செய்வதாக கூறி பலரை ஏமாற்றிய ஸ்ருதி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. ஸ்ருதி தாய் சித்ரா மற்றும் தந்தை பிரசன்னா வெங்கடேஷ் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. ஆடி போனால் ஆவணி என்ற படத்தில் நடித்த புதுமுக நடிகையாக நடித்தவர் ஸ்ருதி. கோவை பாப்பநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்தவர். வெளிநாட்டில் வேலை செய்யும் இளைஞர்களை குறிவைத்து பண மோசடி செய்துள்ளனர். மென்பொறியாளர் சந்தோஷ்குமாரை திருமணம் செய்வதாக கூறி ரூ.43 லட்சம் மோசடி செய்த வழக்கில் நடிகை ஸ்ருதி கைது செய்யப்பட்டார்.

திருமணம் செய்து கொள்வதாக கூறி ரூ.41 லட்சம் மோசடி செய்ததாக சேலத்தைச் சேர்ந்த பாலமுருகன் என்பவர் கொடுத்த புகாரின் பெரில் நடிகை ஸ்ருதி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஜெர்மனி நாட்டில் சாப்ட்வேர் என்ஜினியராக பணியாற்றி வரும் பாலமுருகன் என்பவர், திருமண தகவல் இணையதளத்தில் ஸ்ருதியின் போட்டோவைப் பார்த்து திருமணம் செய்து கொள்ள விரும்பினார்.

ஃபேஸ்புக்கில் கவர்ச்சியான புகைப்படத்தை போட்டு பலரையும் கவர்ந்தார் ஸ்ருதி. பாலமுருகனை திருமணம் செய்வதாக ஆசைகாட்டி 41 லட்சம் மோசடி செய்து விட்டார். இதுதொடர்பாக பாலமுருகன் சைபர்கிரைம் போலீசில் புகார் அளித்தார்.புகாரின் பேரில் வழக்குப்பதிந்த போலீசார் ஸ்ருதி, அவரது தாய் சித்ரா, தம்பி சுபாஷ், வளர்ப்பு தந்தை பிரசன்ன வெங்கடேஷ் ஆகியோரை கைது செய்தனர். கடந்த ஒரு வாரமாக இவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தனர். விசாரணையில், 3 ஆண்டுகளாக அவரை பலரை மோசடி செய்துள்ளார்.

திருமணம் செய்வதாக ஆசை காட்டி ஸ்ருதி மோசடியாக பெற்ற பணத்தில் 15.50 லட்சத்திற்கு 62 பவுன் நகை, டைமண்ட் ரூபி பதித்த தங்க நகைகள் வாங்கியுள்ளார். மேலும் மியூச்சுவல் பண்டில் 5.50 லட்சம் முதலீடு, 1.32 லட்சம் விமான செலவு, ஓட்டல் செலவு போன்றவற்றுக்கு செலவழித்துள்ளார். மேலும், ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தில் ஒரு வருட பவுண்டேசன் சான்றிதழ் படிப்பிற்காக கடந்த ஆண்டில் 10 லட்சம் செலுத்தியுள்ளார். அதேபல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பிற்காக 35 லட்சம் செலுத்தியுள்ளார். 3 ஆண்டிற்கும் மேலாக இப்படி ஏமாற்றியே சொகுசு வாழ்க்கை நடத்தியுள்ளார்.

ஸ்ருதி பலரிடமும் இதேபோல், மோசடி செய்துள்ளதும், பணத்தை திருப்பி கேட்கும் பலரையும் மனித உரிமை ஆணையத்தில் புகார் செய்வதாக மிரட்டி யதும் விசாரணையில் தெரியவந்தது. கோவை சிறையில் அடைக்கப்பட்டிருந்த நடிகை ஸ்ருதி மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. அவரது தாய் சித்ரா, தந்தை பிரசன்ன வெங்கடேஷ் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.

பின்செல்

கோலிவுட் செய்திகள்

img
மெஹந்தி சர்க்கஸ்

ஸ்வேதாவின் மகள் தனது தாயின் பழைய

மேலும்
img
சீதக்காதி  விமர்சனம்

சினிமாவுக்கு இலக்கணம் தேவையில்லை

மேலும்
img
கனா விமர்சனம்

கனா ஒவ்வொரு இந்தியனின் தூக்கத்திலும்

மேலும்
img
1மில்லியன் பார்வையாளர்களை கடந்த ஜி.வி.பிரகாஷின் "ஐயங்கரன்" டீசர்

படங்களிலிருந்து வேறொரு ஸ்டைலில் உருவாகி

மேலும்
img
பில்லா பாண்டி விமர்சனம்

வெளிப்படுத்தி மடைதிறந்த வெள்ளம்

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img