உலக நாடுகள் அதிரும்வண்ணம், கடந்த வாரம் நடந்தேறிய சிரியா தாக்குதலுக்கு கவிஞர் வைரமுத்து கண்டனம் தெரிவித்துள்ளார்.
கடந்த 8 ஆண்டுகளாக நடைபெற்ற போரின் உச்சமாக, இந்தக் கொடூரம் நிகழ்ந்துள்ளது. இத்தாக்குதல் தொடர்பான செய்திகள், புகைப்படங்கள் உலக நாடுகளை அதிரவைத்தன. தாக்குதலுக்கு உள்ளான பிஞ்சுக் குழந்தைகளின் அழுகுரல்கள் உலக மக்களின் வலியாக உணரப்படுகிறது. 'கிளர்ச்சியாளர்க ளின் பிடியிலிருக்கும் கிழக்குக் கௌட்டாவில், தினமும் 5 மணி நேரம் போர் நிறுத்தம் செய்யப்படும்' என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உத்தர விட்டார். இருப்பினும், இந்த உத்தரவு பெயரளவே என்பது மேலும் வருத்தமளிக்கக்கூடிய செய்திதான். இதனால், சிரியா அரசுக்கு எதிராகக் கண்டனங்கள் எழுந்தவண்ணம் இருக்கின்றன. பல்வேறு உலக நாடுகளும் இதுகுறித்து கண்டனங்களைப் பதிவிட்டுவருகின்றன. தமிழகத்திலும் தாக்குதலுக்கு எதிராகக் குரல்கள் ஓங்கி ஒலித்துவருகின்றன.
இதற்கிடையே, சிரியா தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில், கவிஞர் வைரமுத்து கவிதை ஒன்றை வெளியிட்டுள்ளார். 'சிரியா மண்ணே சிரி' என்ற பெயரில் அவர் கவிதை வெளியிட்டுள்ளார். அதில், "மழை அறியாத சிரியா மண்ணில் ரத்தத்துளி சொட்டுகிறது. கரும்புகை தற்போது சிரி யாவை ஆண்டுவருகிறது. குழந்தைகளைப் பதுங்குக் குழியில் வைத்துப் பாதுகாக்கும் நிலைக்குத் தாய்மார்கள் தள்ளப்பட்டுள்ளார்கள். பாதிக்கப்பட்ட குழந்தைகளின் உடல்கள், பதுங்குக் குழிகளில் வீழ்ந்துள்ளன. ரசாயனத் தாக்குதலால் கழுகுகளைக்கூட விட்டுவைக்கவில்லை. வீடுகள், கான்கிரீட் கல்லறைகளாக மாறியுள்ளன. போரும் மரணமும் எந்த வடிவிலும் அழகில்லை" என்று கூறியுள்ளார்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்