img
img

`திரிபுரா, நாகாலாந்தில் பா.ஜ.க; மேகாலயாவில் காங்கிரஸ்'
சனி 03 மார்ச் 2018 15:43:00

img

வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. 

இதில், திரிபுரா, மேகாலயா மாநிலங்களில் 59 தொகுதிகளுக்கும், நாகாலாந்தில் 60 தொகுதிக்கும் தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் நடைபெற்றுவருகிறது. இதில் திரிபுராவில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைவிட பாரதிய ஜனதா கட்சி முன்னிலை வகித்து வருகிறது. பா.ஜ.க 41 இடங்களிலும் மார்க்சிஸ்ட் கட்சி 18 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. இதன்மூலம் 25 ஆண்டுகால மார்க்சிஸ்ட் ஆட்சியை அசைத்த பா.ஜ.க தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியில் அமரவுள்ளது. இதேபோல் நாகாலாந்திலும் பா.ஜ.க முன்னிலை வகித்து வருகிறது.

பா.ஜ.க கூட்டணி 31 தொகுதிகளிலும், நாகாலாந்து மக்கள் கட்சி 25 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கிறது. இதனால் நாகாலாந்திலும் பா.ஜ.க ஆட்சி அமைக்கிறது. இந்த இரண்டு மாநிலங்களிலும் ஒரு தொகுதியில்கூட முன்னிலை பெறாத காங்கிரஸ் கட்சி மேகாலயா மாநிலத்தில் வெற்றிக்கொடி நாட்டி யுள்ளது. மொத்தம் உள்ள 59 தொகுதிகளில் இதுவரை காங்கிரஸ் 10 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. தொடர்ந்து முன்னிலை வகித்து வரும் காங்கிரஸ் அங்கு ஆட்சியைக் கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டு மாநிலங்களில் முன்னிலை வகிப்பதைத் தொடர்ந்து பா.ஜ.க தொண்டர்கள் கொண்டா ட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்

தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன

மேலும்
img
இந்தியாவில் சூரிய சக்தியின் பயன்பாடு அதிகரிப்பு பிரதமர் மோடியை பாராட்டிய பில் கேட்ஸ்

நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு

மேலும்
img
தமிழகத்தில் மர்ம காய்ச்சல் ஒரே நாளில் 100 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி பீதியில் மக்கள்

சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்

மேலும்
img
மஸ்கட் ஏர்போர்ட்டில் இருந்த விமானத்தில் திடீர் தீ விபத்து- 14 பயணிகள் படுகாயம்

மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

மேலும்
img
9 பேரை கொன்ற ராணுவவீரருக்கு 18 ஆண்டுகள் சிறை

பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img