வெள்ளி 25, செப்டம்பர் 2020  
img
img

காவிரி விவகாரம்: அனைத்துக்கட்சியினரைச் சந்திக்க பிரதமர் மறுப்பு!
சனி 03 மார்ச் 2018 15:36:32

img

காவிரி விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார். அப்போது, இரண்டு அதிரடி நடவடிக்கைகள் எடுக்குமாறு ஸ்டாலின், முதல்வருக்கு யோசனை தெரிவித்துள்ளார்.

 
இதனிடையே, கர்நாடக முதல்வர் சித்தராமையா வரும் 7-ம் தேதி அனைத்துக்கட்சிக் கூட்டத்தைக் கூட்ட உள்ளார். இதனிடையே, எதிர்க்கட்சித் தலை வர் மு.க. ஸ்டாலினை அழைத்த முதல்வர் பழனிசாமி, தலைமைச் செயலகத்தில் அவருடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் உடனிருந்தனர். இந்தச் சந்திப்பு அரை மணி நேரம் நடைபெற்றது.

சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், "காவிரி விவகாரம் தொடர்பாகப் பேச வேண்டும் என்று முதல்வர் பழனிசாமி நேற்று என்னை அழைத்தார். அப்போது, மாற்று வேலை இருப்பதால் இன்று (2.3.2018) சந்திக்க வாய்ப்பில்லை. நாளை வருகிறேன் (இன்று 3.3.2018) என்று தெரிவித்தேன். அதன்படி முதல்வரை சந்திக்க வந்தேன். அப்போது, அனைத்துக்கட்சிக் குழுவை பிரதமர் சந்திக்க மறுத்துவிட்டார். சம்பந்தப்பட்ட துறை அமைச்சரை சந்திக்கலாம் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது என்று முதல்வர் கூறினார்.

முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை பிரதமர் மோடி தனித் தனியாகச் சந்தித்து பேசுகிறார். காவிரி விவகாரத்தில் முதல்வர் பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அனைத்துக்கட்சி சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்றும் இதற்காகப் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வலியுறுத்துவது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்தத் தீர்மானத்தின் அடிப்படையில் பிரதமரைச் சந்திக்க முடிவு செய்தோம். தற்போது எங்களை சந்திக்க பிரதமர் மறுத்துவிட்டார். எங்களை பிரதமர் சந்திக்க மறுப்பது வேதனையாக இருக்கி றது. இது எங்களுக்கு கிடைத்த அவமானம் இல்லை. விவசாயிகளுக்கு கிடைத்த அவமானம் மட்டுமல்ல. தமிழகத்துக்கே கிடைத்திருக்கிற அவமானம்.

இந்த விவகாரத்தில் என்ன செய்யலாம் என்று முதல்வர் எங்களைப் பார்த்துக் கேட்டதற்கு, "உடனடியாகச் சட்டமன்றத்தைக் கூட்டுங்கள். அப்போது, பிரத மரை உடனடியாகச் சந்திப்பது என்று தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்" என்று கோரிக்கை வைத்தோம். அதை ஓரளவுக்கு முதல்வர் ஏற்றுக்கொண்டு, "திங்கள்கிழமை வரை பொறுப்போம். ஒருவேளை பிரதமர் அலுவலகத்தில் இருந்து செய்திகள் வர வாய்ப்பு இருக்கிறது.

அதுபோன்று எங்களுக்கு ஒரு செய்தி கிடைத்திருக்கிறது. திங்கள்கிழமை வரை எங்களுக்கு அந்தச் செய்தி வரவில்லையென்றால், நீ்ங்கள் எடுத்து வைத்துள்ள கோரிக்கையை ஏற்றுக்கொண்டு நிச்சயமாகச் சட்டமன்றத்தை வரும் 8-ம் தேதியே கூட்டுகிறோம்" என்று உறுதி அளித்துள்ளார். அப்போது, இன்னொரு யோசனையும் முதல்வரிடம் கூறினோம்.

"நீங்கள் சட்டமன்றத்தைக் கூட்டும் அந்த செய்தி மட்டுமல்லாமல், உங்களுடைய கட்சியின் சார்பில் நாடாளுமன்ற எம்பிக்கள் 50 பேர் இருக்கிறார்கள். தி.மு.க-வைச் சேர்ந்த 4 எம்.பி-க்கள் இருக்கிறார்கள். காவிரி விவகாரத்தில் எங்களை சந்திக்க வேண்டும். அப்படி சந்திக்க மறுத்தால் அத்தனைபேரும் ராஜினாமா செய்வோம் என்று பிரதமருக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்" என்ற அந்த யோசனையையும் எடுத்துச் சொல்லியிருக்கிறோம். எனவே, வரும் 8-ம் தேதி சட்டமன்றம் கூடும்போது, மேலும் பல கருத்துகளை எடுத்துச் சொல்ல இருக்கிறோம்" என்று கூறினார்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தப்ளிக் விழா: டில்லி விமான நிலையத்தில் 8 மலேசியர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்! 960 பேர் இன்னும் தலைமறைவாக உள்ளனர்

இந்தியாவின் டில்லியில் நடைபெற்ற தப்ளிக் சமய விழாவில் கலந்து கொண்ட

மேலும்
img
மோடிக்கு பயங்கரவாதிகள் குறி

பாகிஸ்தானைத் தலைமையிடமாகக் கொண்டுள்ள பயங்கரவாத அமைப்பு டிச.22ஆம் தேதி

மேலும்
img
இந்தியா இமாலய வெற்றி!

ரோகித், ராகுல் சதம்

மேலும்
img
கைலாசாவை அமைத்தே தீருவேன்... நித்தியானந்தா பேச்சு: 40 லட்சம் பேர் விண்ணத்துள்ளனர்

தம்முடைய கைலாசா நாட்டின் குடிமக்கள் ஆவதற்கு உலகெங்கிலுமிருந்து 40 லட்சம்

மேலும்
img
ஐஎஸ் அமைப்புக்கு தொடர்பு இல்லை மறைமுக சதியே காரணம் 

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம்

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img