செவ்வாய் 18, பிப்ரவரி 2020  
img
img

மெர்லின் விமர்சனம்
ஞாயிறு 25 பிப்ரவரி 2018 13:13:43

img
சினிமா இயக்குநராக வேண்டும் என்ற குறிக்கோளுடன் கிராமத்திலிருந்து சென்னைக்கு வந்திருக்கும் விஷ்ணு ப்பிரியன் தனது நண்பர்களுடன் ஒரு வீட்டில் வாடகைக்கு குடியேறுகிறார். ஆனால் அவருடன் தங்கியிருக்கம் நண்பர்கள் விஷ்ணுப்பிரியனின் கற்பனைக்கு இடையூறாக குடித்துவிட்டும் பக்கத்துவீட்டுப் பெண்ணோடு காதல் லீலைகளும் ஈடுபடுகிறார்கள். நண்பர்களின் தொல்லையால் விஷ்ணுப்பிரியனுக்கு கதை எழுத முடியவில்லை. இதனால் விரக்தியடைந்த விஷ்ணுப்பிரியன் அவனது நண்பர்களுக்கு இந்த வீட்டில் ஒரு பேய் இருப்பதாகவும் கடவுள் நம்பிக்கை இல்லாத நானே அந்த பேய் உலாவருவதை பலமுறை உணர்ந்திருக்கிறேன் என்றும் அவர்களுக்கு ஒரு பொய்யான கதையை உண்மையானது என்று பயமுறுத்துகிறார். அதைக் கேட்ட நண்பர்கள் உண்மை என்று நம்பி பயந்து நடுங்குகிறார்கள்.
                                                 
ஆனால் விஷ்ணுப்பிரியன் கற்பனையாக சொன்ன அந்த பேயின் நடமாட்டம் உண்மையில் வருகிறது. கற்பனை கதையாக சொன்ன அந்த பேய் உண்மையாக எதனால் வருகிறது. அந்த பேய் யார்? என்பதை ஒன்றன்பின் ஒன்றாக அதிர்ச்சியூட்டும் வகையில் திரைக்கதையாக சொல்லி இருக்கிறார் இயக்குநர் வ.கீரா.
 
விஷ்ணுப்பிரியன் கதை சொல்லும் விதம் அலாதியானது. தயாரிப்பாளர்களிடம் கதை சொல்லும்போது அந்த கதாபாத்திரமாகவே மாறிவிடுகிறார். பயந்த நடுங்கும் கட்டத்தில் அவரின் தலைமுடிகூட நடிக்கிறது. பயத்தால் தரையில் உருண்டு துள்ளுவது அனைவரையும் கவர்கிறது. கதாநாயகி அஸ்வினி அழகான புன்சிரிப்புடனும் அமைதியான பேச்சிலும் ரசிகர்களை கவர்கிறார். அவரது பாதிமுகம் தீயின் கருகி இருப்பதை பார்த்தும் விஷ்ணுப்பிரியன் பயந்து ஓடும்போது, முகத்தைக் காட்டாமல் காதலித்த அஸ்வினி விரக்தியால் அழுவது அனைத்து இளம்பெண்களையும் கணகலங்க வைக்கும்.
 
சினிமா பத்திரிகையாளாரன தேவராஜ் சித்தராக வந்து கதையின் போக்கை வலுப்படுத்துகிறார். பேய் என்பது இல்லை என்பதற்கு தனக்கே உரித்தான நக்கலுடன் பேசுவது பாராட்டுக்குரியது.
                                      
கற்பனை செய்தே பழக்கப்பட்ட கதாசிரியனின் மூளையில், கற்பனை பேயின் எண்ணங்களின் பரிமாணம் படிந்த தால் மூளையின் செயல்பாடுதான் அவனை பேயாக ஆட்டுகிறது என்ற விஞ்ஞான விளக்கத்தை விவரிக்கும் விதம் அற்புதம். பேய் ஓட்டும் பூசாரிக்கும் விஞ்ஞானத்தை விளக்கும் சித்தருக்கும் பொறுத்தமான உடற்கட்டு கொண்டவர் தேவராஜ். வளர வாழ்த்துகிறோம்.
 
விஷ்ணுப்பிரிணனுடன் இயக்குநர் தங்கர்பச்சான், மனோபாலா, மு.களஞ்சியம், ஆடுகளம் முருகதாஸ், லொல்ளு சபா, ஜீவா, சிங்கம்புலி, ரிசா, நான் மகான் அல்ல ராமச்சந்திரன், ஆதவன், வினோர்த ஆதித்யா, கம்பம் மீனா, வீர சந்தானம், வைசாலி ஆகியவர்களும் நடித்துள்ளார்கள். பேய் படத்தின் ஒப்பனை உடலுக்கு இசைதான் உயிர் கொடுக்கும் என்பதை நிரூபித்துள்ளார் இசையமைப்பாளர் கணேஷ் ராகவேந்திரா. மெர்லின் அனை வரையும் மெய் சிலிர்க்க வைக்கிறது.
பின்செல்

கோலிவுட் செய்திகள்

img
மெஹந்தி சர்க்கஸ்

ஸ்வேதாவின் மகள் தனது தாயின் பழைய

மேலும்
img
சீதக்காதி  விமர்சனம்

சினிமாவுக்கு இலக்கணம் தேவையில்லை

மேலும்
img
கனா விமர்சனம்

கனா ஒவ்வொரு இந்தியனின் தூக்கத்திலும்

மேலும்
img
1மில்லியன் பார்வையாளர்களை கடந்த ஜி.வி.பிரகாஷின் "ஐயங்கரன்" டீசர்

படங்களிலிருந்து வேறொரு ஸ்டைலில் உருவாகி

மேலும்
img
பில்லா பாண்டி விமர்சனம்

வெளிப்படுத்தி மடைதிறந்த வெள்ளம்

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img