ஞாயிறு 04, டிசம்பர் 2022  
img
img

கேணி விமர்சனம்
ஞாயிறு 25 பிப்ரவரி 2018 13:11:41

img
குடிதண்ணீருக்காக தோண்டப்பட்ட ஒரு கிணற்றை வைத்து, சமுதாய சீர்திருத்தத்தை அழுத்தமாக பதிவு செய்திருக்கின்ற படம் கேணி. ஆழமான கருத்தை மேலோட்டமாக பாமரனுக்கும் புரிய வைக்கின்ற முறையில் சொல்லிய இயக்குநர் எம்.ஏ.நிஷாத்துக்கு வாழ்த்துக்கள்.
 
பொதுவாக மதுக்கடையில் மது குடிக்கும் காட்சி எடுக்கும்போது பிளாஸ்டிக் டம்ளரில் மதுவை ஊற்றி குடிப்பது போல் படம் எடுப்பார்கள். ஆனால் மது குடிக்கும்போதுகூட அது மற்றவர்களுக்கு தெரியக் கூடாது என்பதற்காக இளநீரில் மதுவை ஊற்றி இளநீரை உறிஞ்சுவதைப்போல் மது குடிக்க வைத்திருப்பது இயக்குநரின் சமுதாய சிந்தனையின் சிறிய வெளிப்பாடுதான். 
 
பத்திரிகையின் தர்மம் என்ன என்பதை செய்தியாளர்களுக்கு பாடம் நடத்தும் இயக்குநரை பாராட்டாமல் இருக்க முடியாது. 8கோடி மக்களில் அரசியல்வாதிகள் சினிமாகாரர்கள் தொழில் அதிபர்கள் என இருப்பது ஒருசில நூறுபேர்கள்தான். இவர்களின் செயல்கள்தான் செய்தியா? நாட்டுக்காக உயிரை விடவும் தயாரக இருக்கும் சமுதாய சிந்தனையுள்ள மக்களின் செயல்கள் செய்திகள் இல்லையா? என்று இயக்குநர் கேட்டும் கேள்விகள் நம்மை சிந்திக்க வைக்கின்றது. வாழ்த்துக்கள் நிஷாத்.
 
இனி கதைக்கு வருவோம். கேணி கற்பனைக் கதையல்ல, உண்மையாகவே நடந்த கதை.
தமிழ்நாடு கேரள எல்லையில் இருக்கும் ஒரு கிராமம். எல்லைப் பிரிவினைனயின் போது, வீடு தமிழகத்திற்கும் அந்த வீட்டின் கிணறு இருக்கும் இடம் கேரளத்திற்கும் போய்விடுகிறது. தமிழ்நாட்டில் இருக்கும் வீடும் அதை சுற்றியுள்ள ஊரும் குடிதண்ணீர் இல்லாமல் தவிக்கிறது. ஆனால் அருகில் இருக்கும் கிணற்றில் வற்றாத நீர் ஊற்று இருப்பதால் தண்ணீர் நிரம்பி இருக்கிறது. எல்லைப் பிரச்சினையால் கிணற்றிலிருக்கும் தண்ணீரை தமிழக மக்கள் பயன்படுத்தக் கூடாது என்று கேரள அதிகாரிகள் தடை விதிக்கிறார்கள். அந்த வீடும் கிணறும் தமிழக எல்லையில் இருக்கும்போது அந்த வீட்டுக்கு சொந்தக்காரரான தமிழர் கேரளத்தில் வேலை பார்க்கிறார். அவரது மனைவி ஜெயப்பிரதா கேரளத்துப் பெண். விசாரணைக் கைதியாக இருக்கும் ஜெயப்பிரதாவின் கணவர் சிறையில் இறந்து விடுகிறார். அவரின் கடைசி விருப்பப்படி தனது கணவரின் சொந்த ஊரான தமிழகத்திற்கு செல்ல முடிவு செய்து தமிழ்நாட்டுக்கு வந்துவிடுகிறார் ஜெயப்பிரதா. அப்போதுதான் தெரிகிறது தனது கணவ ரின் வீடு இருக்கும் இடம் தமிழ்நாட்டுக்கும் கிணறு இருக்கும் இடம் கேரளத்திற்கும் சொந்தமானது என்று. 
 
இதில் தமிழ்நாட்டு அமைச்சர் தலைவாசல் விஜய், அந்த கிராமத்தை வெளிநாட்டு தொழில் அதிபர்கள் தொழிற்சாலை அமைத்துக் கொள்ள அனுமதி அளிக்கிறார். இதற்கு கேரள அதிகாரிகளுக்கும் கமிஷன் கொடுத்து அந்த கிராமத்தையே வளைத்துப்போட திட்டமிடுகிறார். அந்த கிராம மக்கள் ஊரை காலி செய்ய வேண்டும் என்பதற்காகவே தண்ணீர் இல்லாத கிராமமாகவே வைக்கிறார் அமைச்சர் தலைவாசல் விஜய். இந்த அதிகார வர்க்கத்தோடு போராடுகிறார் ஜெய்ப்பிரதா. ஜெய்ப்பிரதாவுக்கு ஆதரவாக ஊர்த்தலைவர் பார்த்திபன், வக்கீல் நாசர் ஆட்சியர் ரேவதி ஆகியோர் துணையாக இருக்கிறார்கள். அமைச்சகத்தோடும் அதிகாரிகளோடும் போரா டும் ஜெய்ப்பிரதா கிணற்றை மீட்டு தண்ணீர் இல்லாத அந்த தமிழக மக்களுக்கு தண்ணீர் 
கொடுத்தாரா இல்லையா என்று கேள்விக்கு வெள்ளித்திரை பதில் அளிக்கிறது. 
 
ஜெய்ப்பிரதா துணிச்சலான பெண் என்பதை இப்படத்தில் காட்டியிருக்கிறார். சமுதாய சிந்தனையின் உருவ மாகவே மாறியிருக்கிறார் ஜெய்ப்பிராதா. பார்த்தீபனின் நடிப்பு முத்திரை பதிக்கிறது. நாசர் கோபத்தை வெளிப்ப டுத்தும் விதத்தை நிச்சயமாக ரசிகர்கள் ரசிப்பார்கள். இவர்களோடு நடித்திருக்கும் அனு ஹாசன், ரேகா, ஜாய் மேத்யூ, எம்.எஸ்.பாஸ்கர், பிளாக் பாண்டி ஆகியோர் தங்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்தை உணர்ந்து தத்ரூ பமாக நடித்திருக்கிறார்கள். 
 
இப்படத்திற்கு கதாநாயகன் திரைக்கதை என்றால் வசனம்தான் கதாநாயகி. 
பின்செல்

கோலிவுட் செய்திகள்

img
மெஹந்தி சர்க்கஸ்

ஸ்வேதாவின் மகள் தனது தாயின் பழைய

மேலும்
img
சீதக்காதி  விமர்சனம்

சினிமாவுக்கு இலக்கணம் தேவையில்லை

மேலும்
img
கனா விமர்சனம்

கனா ஒவ்வொரு இந்தியனின் தூக்கத்திலும்

மேலும்
img
1மில்லியன் பார்வையாளர்களை கடந்த ஜி.வி.பிரகாஷின் "ஐயங்கரன்" டீசர்

படங்களிலிருந்து வேறொரு ஸ்டைலில் உருவாகி

மேலும்
img
பில்லா பாண்டி விமர்சனம்

வெளிப்படுத்தி மடைதிறந்த வெள்ளம்

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img