img
img

எங்களுக்கு `மோடி கேர்’ தேவையேயில்லை! - மம்தா பானர்ஜி அதிரடி
புதன் 14 பிப்ரவரி 2018 14:00:03

img

`மோடி கேர்’ திட்டத்திலிருந்து வெளியேறுவதாக மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். 

மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கடந்த 1-ம் தேதி நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார். இந்த நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் `மோடி கேர்’ திட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இந்தியாவில் உள்ள 10 கோடி ஏழை குடும்பங்கள் பயன்பெறும் வகையில் தேசிய சுகாதார பாதுகாப்புத் திட்டம் (Modi Care) கொண்டு வரப்படும் என்று மோடி அரசு உறுதியளித்துள்ளது. இத்திட்டத்தின்கீழ் ஏழை, எளிய மக்கள் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவக் காப்பீடு பெற முடியும் என்கிறது மத்திய அரசு.

மேலும், தேசிய சுகாதார பாதுகாப்புத் திட்டத்துக்கு ஆண்டொன்றுக்கு 11,000 கோடி ரூபாய் தேவைப்படும் என  நிதி ஆயோக்கும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகமும் கணித்துள்ளன. இதற்கான செலவினங்களில் 40% மாநில அரசுகள் பங்களிக்க வேண்டும் என்று மத்திய அரசு கூறியுள்ளது. மாநில அரசுகளின் நிதிநிலையை ஆராயாமல் மத்திய அரசே தன்னிச்சையாகத் திட்டங்களை அறிவித்து செலவு செய்யும்படி திணிக்கிறது என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

இந்நிலையில், `மோடி கேர்’ திட்டம் எங்களுக்குத் தேவையில்லை என மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மேற்கு வங்கா ளத்தில் கிருஷ்ணாநகரில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய மம்தா பானர்ஜி ‘எங்கள் மாநிலத்தில் ஏற்கெனவே போதுமான மருத்துவக் காப்பீ ட்டுத் திட்டங்கள் உள்ளன. எங்கள் மாநிலம் அரும்பாடுபட்டு சேர்த்த வளங்களை, மோடி கேர் திட்டத்துக்காக `வீணடிக்க முடியாது’ என்று கூறி யுள்ளார் காட்டமாக.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்

தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன

மேலும்
img
இந்தியாவில் சூரிய சக்தியின் பயன்பாடு அதிகரிப்பு பிரதமர் மோடியை பாராட்டிய பில் கேட்ஸ்

நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு

மேலும்
img
தமிழகத்தில் மர்ம காய்ச்சல் ஒரே நாளில் 100 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி பீதியில் மக்கள்

சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்

மேலும்
img
மஸ்கட் ஏர்போர்ட்டில் இருந்த விமானத்தில் திடீர் தீ விபத்து- 14 பயணிகள் படுகாயம்

மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

மேலும்
img
9 பேரை கொன்ற ராணுவவீரருக்கு 18 ஆண்டுகள் சிறை

பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img