பள்ளி மாணவர்களை முன்னிறுத்தி போராட்டம் நடத்துவது தவறு. மாணவர்களைப் போராட்டத்தில் ஈடுபடுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.
மாணவர்களை முன்னிறுத்தி போராட்டம் நடத்தும் புதிய கலாசாரம், தூத்துக்குடியில் பரவிவருகிறது. கடந்த, 2017-ம் ஆண்டு, தமிழகத்தில் ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வலியுறுத்தி இளைஞர்கள், கல்லுாரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வெற்றி கண்டனர். அதிலிருந்து, சமூக பிரச்னைகளுக்கு, பள்ளி மாணவர்களையும் முன்னிறுத்தி போராட்டம் நடத்துவது அதிகரித்து வருகிறது.
துாத்துக்குடி மாவட்டத்தில், அரசுக்கு எதிரான போராட்டங்களில் பள்ளி மாணவர்களை முன்னிறுத்தும் கலாசாரத்தை என்.ஜி.ஓ-களும் சில சமூக அமைப்புகளும் உருவாக்கி வருகின்றன. சமீபத்தில், தூத்துக்குடியில், இலவச பஸ் பாஸ் வைத்திருக்கும் பள்ளி மாணவர்களைப் பேருந்துகளை ஏற்றாமல் செல்கின்றனர் எனச் சொல்லி, உள்ளூர் சமூக ஆர்வலர் ஒருவரின் தூண்டுதலின் பேரில், பள்ளி மாணவர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பல மாணவர்கள் என்ன காரணத்துக்காகப் போராட வந்தோம் எனத் தெரியாமலேயே வந்தனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் தாமிர ஆலையின் விரிவாக்கத்தை எதிர்த்து குமரெட்டியாபுரம் ஊர்மக்கள் நடத்திய போராட்டத்திலும் தங்கள் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பாமல் நிறுத்தி வைத்து மாணவர்களைப் பள்ளிச்சீருடையில் முன்வரிசையில் அமர வைத்திருந்தனர். காவல்துறையின் நடவடிக்கைக்குப் பயந்து பள்ளி மாணவர்களைக் களத்தில் இறக்கி இருப்பதாகவும் இதன் மூலம் போராட்டம் நடத்துபவர்கள் தப்பித்துக்கொள்ள நினைப்பதாகவும் கூறப்படுகிறது. பெற்றோர்களே பள்ளி மாணவர்களைப் பள்ளி செல்லவிடாமல் போராட்டத்தில் ஈடுபடுத்துவதும், அதற்குச் சில அமைப்புகள் துணை நிற்பதும் கண்டிக்கத்தக்கது எனவும் அடுத்த மாதம் அரசுத் தேர்வுகள் ஆரம்பமாகும் நிலையில், மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடுவது அவர்கள் படிப்பைப் பாதிக்கும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ், “பள்ளிக்கூடத்துக்கு படிக்கச் செல்லும் மாணவர்களைப் போராட்டங்களில் ஈடுபடுத்துவது தவறு. மாணவர்களின் படிப்பு தடைபடுவதை அனுமதிக்க முடியாது. அவ்வாறு போராட்டத்தில் ஈடுபடுத்தினால் மாவட்டக் கல்வி அதிகாரிகள், பள்ளி நிர்வாகத்திடம் விளக்கம் கேட்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்