அர்ஜூன் இயக்கியிருக்கும் இப்படத்தில் காதலுக்கும் நாட்டுப்பற்றுக்கும்குறை வில்லை. அழகான காதலும் அழுத்தமான நாட்டுப்பற்றும் படத்தை ஆக்கிரமத்திற்கிறது. உயிரை பலிகொடுக்கும் இடத்திலும் காதல் மலரும் என்பது அர்ஜூனின் யதார்த்தத்தை மீறிய சிந்தனையாக இருக்கலாம்.
கதாநாயகி ஐஸ்வர்யா அர்ஜூன் தொலைக்காட்சி நிறுவனத்தில் நிருபராக இருக்கிறார். வேறு ஒரு தொலைக்காட்சி நிறுவனத்தில் கதாநாயகன் சந்தன்குமார் நிருபராக பணியாற்றுகிறார். இருவரும் கார்க்கில் போரை தொலைக்காட்சியில் ஒளிபரப்ப கேமிராவுடன் தங்களது உதவியாளர்களுடனும் டில்லி செல்கிறார்கள். பிறகு உதவியாளர்கள் கார்க்கில் செல்லாமல் சென்னை திரும்பி விடுகிறார்கள். சந்தன்குமாரும் ஐஸ்வர்யா அர்ஜூனனும் கார்க்கில் செல்கிறார்கள்.
போரை படம்பிடிக்க சென்ற சந்தன்குமாருக்கு ஐஸ்வர்யா அர்ஜூன் மீது காதல் மலர்கிறது. ஆனால் ஐஸ்வர்யா அர்ஜூன் வேறு ஒருவருக்கு நிச்ச யமானவர் என்று தெரியவருகிறது. இருந்தாலும் அவர் மீது காதல் துளிர்விடுகிறது நாயகனுக்கு. இந்த இடத்தில் காதலுக்கு கண்ணும் இல்லை பண்பும் இல்லை என்பதை தன்னையும் அறியாமல் சொல்லிவிட்டார் அர்ஜூன். நாட்டுப்பற்று அதிகம் கொண்டவர் அர்ஜூன். தான் வேறு ஒருவருக்கு நிச்சயம் செய்யப்பட்டவள் என்பதையும் மறந்து சாந்தன் குமார் மீது காதல் மலர்கிறது ஐஸ்வர்யாவுக்கும். ஒருவருக்கொருவர் சொல்லிக்கொள்ளாமலேயே மன துக்குள்ளேயே காதலித்து வருகிறார்கள். இந்த காதல் திருமணத்தில் முடிந்ததா? அல்லது ஏற்கனவே நிச்சயம் செய்த மாப்பிள்ளையோடு ஐஸ்வர்யா வுக்கு திருமணம் நடந்ததா என்பதை வெள்ளித்திரை விளக்குகிறது.
சாந்தன் குமாருக்கு இது முதல்படமா என்பதே தெரியாத அளவுக்கு நடிப்பில் முன்னேறி இருக்கிறார். நடிப்பில் எந்த பதட்டமும் தெரியவில்லை. கட்டுமஸ்தான உடற்கட்டும் அவருக்கு கைகொடுத்திருக்கிறது. ஐஸ்வர்யா அர்ஜூன் நடனத்தில் அசத்தியிருப்பதோடு நடிப்பிலும் தனது கவனத்தை சிதறவிடாமல் அழகாக நடித்திருக்கிறார். சுஹாசினி விஸ்வநாத் ராஜேந்திரன் யோகிபாபு சதீஷ் ஆகியோரும் நடிப்பும் படத்திற்கு வலு சேர்த்திருக்கிறது.
அன்று கடை வீதியில் காதல் மலர்ந்தது அங்காடித் தெருவில், இன்று போர்களத்தில் காதல் பூத்தது "சொல்லிவிடாவா"வில்