img
img

தாயின் இறுதி சடங்கிற்கு பிச்சை எடுத்த சிறுவர்கள்.
வெள்ளி 09 பிப்ரவரி 2018 14:44:37

img

திண்டுக்கல்,

திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் தாயின் இறுதி சடங்கிற்கு, சிறுவர்கள் பிச்சை எடுத்த சம்பவம் அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் எரி யோடு அருகே உள்ள மேட்டுப் பட்டி பகுதியைச் சேர்ந்தவர் காளி யப்பன், இவரின் மனைவி விஜயா (40). கூலி வேலை பார்த்து வந்த காளியப்பன் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்து போனார். இவர்க ளுக்கு மோகன்(14), வேல்முருகன்(13) என்ற மகன்களும், காளீஸ்வரி என்ற ஒரு மகளும் உள்ள னர். இதற்கிடையே விஜயாவுக்கு புற்று நோ முற்றி படுக் கையில் கிடந்த தால், அதிர்ச்சியடைந்த சிறுவர் கள், சிகிச்சைக்காக உறவினர் களின் உதவியை நாடினர். 

ஆனால், உதவிக்கு யாரும் முன்வராததால், அக்கம்பக்கத்தினரின் உதவியுடன் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், சிகிச்சை பல னின்றி விஜயா பரிதாபமாக உயிரிழந்தார். இதனால், விரக்தியின் உச்சிக்கு சென்ற சிறுவர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். தொடர்ந்து என்ன செவது என்று தெரியாத சிறுவர்கள், அங்கிருந்த நோயாளிகள், மக்களிடம் தாயின் உடலை அடக்கம் செய வேண்டும் என்று கூறி பிச்சை கேட்டனர். தகவல் அறிந்த மருத்துவனையின் நலப்பணிகள் இணை இயக்குனர் மாலதி பிரகாஷ், சிறுவர்களை நேரில் சென்று ஆறுதல் கூறி உதவி செதார். விஜயாவின் உடல் திண்டுக்கல் மின் மயானத்தில் தகனம் செயப்பட்டது.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்

தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன

மேலும்
img
இந்தியாவில் சூரிய சக்தியின் பயன்பாடு அதிகரிப்பு பிரதமர் மோடியை பாராட்டிய பில் கேட்ஸ்

நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு

மேலும்
img
தமிழகத்தில் மர்ம காய்ச்சல் ஒரே நாளில் 100 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி பீதியில் மக்கள்

சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்

மேலும்
img
மஸ்கட் ஏர்போர்ட்டில் இருந்த விமானத்தில் திடீர் தீ விபத்து- 14 பயணிகள் படுகாயம்

மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

மேலும்
img
9 பேரை கொன்ற ராணுவவீரருக்கு 18 ஆண்டுகள் சிறை

பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img