சென்னை, பிப்.7-
ஓர் இளைஞர் பக்கோடா விற்பதன் மூலம் நாளொன்றுக்கு 200 ரூபாய் வருமானம் ஈட்டுகின்றார் என்றால், அதுவும் வேலைவாய்ப்பு தான் என பிரதமர் மோடி கூறியிருந்தார். பிரதமரின் இந்த கருத்துக்கு பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்கள் வலுத்து வருகின்றன. இந்நிலையில் எம்பியான பின்னர் பாஜக தலைவர் அமித்ஷா தனது கன்னிப்பேச்சில் மோடியின் பக்கோடா கருத்தை வரவேற்று பேசினார். இதனையடுத்து மேலும் மோடியின் பக்கோடா வேலைவாய்ப்பு குறித்த கருத்துக்கு விமர்சனங்கள் வலுக்கின்றன.
இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மோடியின் இந்த பக்கோடா வேலைவாய்ப்பு குறித்து நார் நாராக கிழித்துள்ளார். முதலில் பிரதமரும் அமித்ஷாவும் பக்கோடா விற்றுக் காட்டினால் அதை பார்த்து நாமும் கற்றுக்கொண்டு விற்கலாம். பக்கோடா விற்பது நல்ல வேலை என்றால் மோடி ஏன் பிரதமராக இருக்க வேண்டும்? அமித்ஷா ஏன் பாஜக தலைவராக இருக்க வேண்டும்? இருவரும் பக்கோடா விற்க செல்ல வேண்டியதுதானே. நாட்டின் பிரதமரும் கட்சியின் தலைவரும் பக்கோடா விற்பதை பார்த்து நாமும் பக்கோடா விற்க போய்விடலாம்.
ஒரு காலத்தில் மோடி டீ விற்றார், இப்போது நம்மை பக்கோடா விற்க சொல்கிறார். அடுத்தது புரோட்டாவும் சால்னாவும் (கறி) விற்க சொன்னாலும் சொல்லலாம். ஏதோ நாட்டில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்றார் சீமான்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்