img
img

பத்மாவதி விமர்சனம்
சனி 27 ஜனவரி 2018 16:35:34

img
இனிக்கும் வரலாறு எல்லோருக்கும் கிட்டுவதில்லை. வரலாற்று உண்மைகள் கசப்பாகத்தான் 
 
இருக்கும். டில்லி சாம்ராஜ்யத்தை ஆண்ட முகலாய மன்னன் அலாவுதீன் கில்ஜி சித்தூர் ராணி பத்மாவதி மீது கொண்ட மோகத்தினால்தான் போர் புரிந்தான் என்பது வரலாற்று உண்மை. பெண்களை மையப்படுத்தி நடந்த இதிகாசப் போரை ஏற்றுக் கொண்டவர்கள், வரலாற்றுப் போரை மட்டும் மறைக்க நினைப்பது ஏன்? மாம்பலச்சாற்றில் வேப்பங்காயை மறைத்து வைத்தாலும் அது இனிக்காது. காய் கசக்கத்தான் செய்யும். கில்ஜி, கண்ணனின் லீலைகளை நெஞ்சில் சுமந்த மன்னன். கண்ணனை ஏற்பவர்கள் ஏன் மன்னவனை மட்டும் ஏற்பதில்லை?. மாற்றான் மனைவியை அடைய வேண்டும் என்பதற்காகத்தான் கில்ஜி சித்தூர் மீது படையெடுத்தான் என்பது உண்மை என்றால், அது வெட்க்கப்பட வேண்டிய வரலாறு ஆகும். வரலாறுகள் மறைக்கப்படலாம் ஆனால் அழித்துவிட முடியாது. 
 
13 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சிங்கள பேரரசனின் மகள்தான் பத்மாவதி. மிகவும் அழகான தோற்றம் உடையவள். சிங்களத்து முத்துக்களை வாங்கு வதற்காக சிங்களம் சென்ற சித்தூர் மன்னன் ரத்தன் சென், சிங்களத்து இளவரசி பத்மாவதியை திருமணம் செய்துகொண்டு ஊர் திரும்புகிறார். சித்தூர் மக்களும் பத்மாவதியை இராணியாக ஏற்றுக் கொள்கிறார்கள். அரண்மனைக்குள் அடிஎடுத்து வைக்கும் ராணி பத்மாவதியை முதலில் ஆசி பெறு வதற்காக ராஜகுருவிடம் அழைத்து செல்கிறார்கள். ராணியின் அழகில் ராஜகுரு மதிமயங்குகிறார். அவளது 
குரலை ரசிக்க வேண்டும் என்பதற்காகவே பல கேள்விகளை கேட்கிறார். கேட்ட கேள்விகளுக்கு அனைத்திற்கும் தக்க பதில் கூறி விடை பெறுகிறார் ராணி பத்மாவதி. 
 
ராணியின் மோகத்தில் மதியிழந்த ராஜகுரு, இரவு வேளையில் ராணியின் படுக்கை அறையில் நடக்கும் சல்லாபத்தை காண முயற்சிக்கிறான். இதை உணர்ந்த மன்னன் ரத்தன் சென், கதவின் இடுக்கில் தெரியும் உருவத்தை குறிவைத்து கத்தியை எறிகிறார். அது ராஜகுருவின்  தோள்பட்டையை குத்தி கீழே விழுகிறது. படுக்கையறையை நோட்டம் விட்டது ராஜகுருதான்  என்பதை அறிந்த மன்னன், ராஜகுருவை நாடுகடத்துகிறார். 
 
நாடு கடத்தப்பட்ட ராஜகுரு நேராக டில்லி சென்று சுல்தான் அலாவுதீன் கில்ஜியை சந்தித்து அடைக்கலம் கேட்கிறான். நாடு கடத்தப்பட்ட விபரத்தை கேட்கிறார் கில்ஜி, அப்போதுதான் ராணியின் அழகை ராஜகுரு வர்ணித்து, அவளைப்போல் ஓர் அழகி இந்த உலகில் வேறு இல்லை என்று கூறுகிறான். வயதான ராஜகுருவே அவளது அழகைக் கண்டு ஆசை கொள்கிறார் என்றால் அவள் எப்படிப்பட்ட பேரழகியாக இருக்க வேண்டும் என்று நினைத்து பத்மா வதியை பார்க்காமலேயே அவள் மீது இச்சை கொள்கிறான் டில்லி பேரரசர் அலாவுதீன்நமலம  கில்ஜி. எப்படியும் பத்மாவதியை பார்த்துவிட வேண்டும் என்ற ஆசையால் சூழ்ச்சி செய்து சித்தூர் மன்னனையும் அவனது குடும்பத்தினரையும் விருந்துக்கு டில்லிக்கு வரும்படி அழைப்பு விடுக்கிறார். ஆனால் கில்ஜியின் எண்ணத்தை புரிந்து கொண்ட மன்னன் விருந்துக்கு வர மறுத்து விடுகிறார். 
 
ஆயினும் விடவில்லை கில்ஜி, போர் படையுடன் வந்து சித்தூர் கோட்டையை முற்றுகையிட்டு கோட்டைக்கு வெளியிலேயே கூடாரம் அமைத்து தங்கி விடுகிறான். இதனால் ஆத்திரம் அடைந்த சித்தூர் மன்னன், கோட்டையை முகாமிட்டிருக்கும் கில்ஜியின் கூடாரத்தின் மீது சுடுகற்களை எரிந்து கூடாரத்தையே எறித்து விடுகிறார். துணிக்கூடாரம் நெருப்பில் எறிந்தது, ஆனால் கில்ஜியின் மனம் மட்டும் காமத்தீயில் சிவந்து சூழ்ச்சிக் கனலை கக்கி யது. சமாதானப் போர்வையை போர்த்தியாவது பத்மாவதியை பார்த்துவிட வேண்டும் என்ற ஆசையால் சமாதானத் தூது அனுப்புகிறான். டில்லி திரும்பு ம்முன் உங்களை சந்தித்து விருந்தாளியாக உங்களுடன் அமர்ந்து விருந்துண்டு மகிழமட்டுமே மன்னர் கில்ஜி விரும்புகிறார் என்ற தூதுச் செய்தியை தூதன் படிக்கிறான். அதற்கு மூன்று நிபந்தனைகளை மன்னர் விதிக்கிறார். 
 
ஒன்று சித்தூர் கோட்டை அருகே முகாமிட்டிருக்கும் படை வீரர்கள் அனைவரும் டில்லிக்கு திரும்பிச் செல்ல வேண்டும் இரண்டு கில்ஜி மட்டும்தான் தனி யாக அரண்மனைக்கு வரவேண்டும். மூன்று ஆயுதம் எதுவும் கொண்டு வரக்கூடாது என்ற நிபந்தனைகளை விதிக்கிறார். அதற்கு கில்ஜியும் சம்மதம் தெரிவித்து அரண்மனைக்குள் தன்னந்தனியாக வருகிறார். 
 
மன்னனும் சுல்தானும் அருகருகே அமர்ந்து உண்டு மகிழ்கிறார்கள். விடைபெறும் முன் தங்களது குடும்பத்தாரை அறிமுகம் செய்துவையுங்கள் என்று கில்ஜி கூறுகிறார். இதற்கு சுற்றியிருக்கும் தனது அதிகாரிகளை காண்பித்து இவர்கள்தான் எனது குடும்பத்தார்கள் என்று பதிலளிக்கிறார் மன்னர் ரத்தன் சென். நான் இவர்களை கேட்கவில்லை உங்கள் குடும்பத்தார் என்பது உங்கள் மனைவி பத்மாவதியைத்தான் அறிமுகம் செய்து வையுங்கள் என்றேன் என்று கேட்கிறார் கில்ஜி. கில்ஜியின் நோக்கம் வெட்டவெளிச்சமாக தெரிந்தது மன்னனுக்கு. சுற்றியிருப்பவர்கள் வாளை உருவி கில்ஜியின் கழுத்தில் வைக்கிறார்கள். ஆயினும் சக்ரவர்த்தி கில்ஜியை கொல்ல சிற்றரசன் ரத்தன் சென் தயங்குகிறார். உன் மனைவியை என்னிடம் காட்டாவிட்டால் மீண்டும் போர் முனையில் சந்திப்பேன் என்று மிரட்டுகிறார் கில்ஜி. போரை தடுக்க பத்மாவதியும் "என்னை கில்ஜி பார்த்துவிட்டுப் போகட்டும். என்று சம்மதமும் தெரிவிக்கிறார். தூரத்தில் பத்மாவதியை நிற்கவைத்து முகத்தின் முன் புகை மூட்டத்தை ஏற்படுத்தி கில்ஜியிடம் காட்டுகிறார்கள். 
 
இலைமறைவு காய்மறைவாக பத்மாவதியை பார்த்த கில்ஜி விரக்தியுடன் கூடாரத்திற்கு செல்கிறார். பிறகு மன்னருக்கு ஒரு ஓலை அனுப்புகிறார். என்னுடன் வந்திருந்த படை வீரர்கள் அனைவரும் நீங்கள் கூறியபடி ஏற்கனவே டில்லிக்கு சென்றுவிட்டார்கள். நானும் புறப்பட தயாராகிவிட்டேன். கடைசியாக தங்களை தனியாக சந்தித்து பேச விரும்புகிறேன் என்று ஓலை அனுப்புகிறார். இதை நம்பி மன்னர் ரத்தன் சென்னும் கூடாரத்தில் தங்கி இருக்கும் அலாவுதீன் கில்ஜியை தனியே சந்திக்கிறார். அப்போது கூடாரத்திற்குள் மறைந்திருந்த வீரர்களால் மன்னர் ரத்தன் சென் கைது செய்யப்பட்டு டில்லிக்கு கொண்டு செல்லப்படுகிறார். 
 
அதன் பிறகு பத்மாவதிக்கு ஒரு ஓலை அனுப்புகிறார் கில்ஜி. நீங்கள் டில்லிக்கு வந்து என்னை தனியாக  சந்திக்க வேண்டும். இல்லை என்றால் உங்கள் கணவர் ரத்தன் சென் கொல்லப்படுவார் என்று எழுதி அனுப்புகிறார். கணவரை காப்பாற்ற பத்மாவதியும் டில்லிக்கு சென்று கணவரை மீட்டு வருகிறார். எப்படி மீட்கிறார் என்பதை விரிவாக வெள்ளித்திரையில் காட்டியிருக்கிறார் இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி.
 
சரித்திர காலத்து ராணி பத்மாவதியாக மாறியிருக்கிறார் தீபிகா படுகோனே. சித்தூர் மன்னன் ரத்தன் சென் எப்படி அக்காலத்தில் இருந்திருப்பார் என்பதை நம் கண்முன்னே காட்டியிருக்கிறார் ஷாகித் கபூர். அலாவுதீன் கில்ஜி இப்படித்தான் இருந்திருப்பார் என்று எண்ணத் தோன்றும் அளவுக்கு தன்னை மாற்றியிருக்கிறார் ரன்வீர் சிங். கற்பை நிரூபிக்க சீதை தீயில் விழுந்து மீண்டாள், கற்பை காப்பாற்ற பத்மாவதி தீயில் வீழ்ந்து மாண்டாள். மொத்தத்தில் புதைக்கப்பட்ட வரலாறு ஒன்று தோண்டி எடுக்கப்பட்டிருக்கிறது. 
பின்செல்

கோலிவுட் செய்திகள்

img
மெஹந்தி சர்க்கஸ்

ஸ்வேதாவின் மகள் தனது தாயின் பழைய

மேலும்
img
சீதக்காதி  விமர்சனம்

சினிமாவுக்கு இலக்கணம் தேவையில்லை

மேலும்
img
கனா விமர்சனம்

கனா ஒவ்வொரு இந்தியனின் தூக்கத்திலும்

மேலும்
img
1மில்லியன் பார்வையாளர்களை கடந்த ஜி.வி.பிரகாஷின் "ஐயங்கரன்" டீசர்

படங்களிலிருந்து வேறொரு ஸ்டைலில் உருவாகி

மேலும்
img
பில்லா பாண்டி விமர்சனம்

வெளிப்படுத்தி மடைதிறந்த வெள்ளம்

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img