சென்னை, ஜன.24-
கடந்த சில தினங்களுக்கு முன்னர் தமிழக அரசு, பேருந்து கட்டணத்தை இரு மடங்காக உயர்த்தியது. சாதாரண மற்றும் நடுத்தர வர்க்க மக்களை இந்த கட்டண உயர்வு மிகவும் பாதித்துள்ளது.10 ரூபாய் கட்டணம் செலுத்தி வந்த பயணிகள் தற்போது 25 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டிய நிலைக்கு அரசு தள்ளியுள்ளது. இது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
கட்டண உயர்வு என்றால் ஏதோ 2 அல்லது 3 ரூபாய் உயர்த்தலாம். ஆனால் இப்படி இரண்டு மடங்குக்கும் அதிகமாக பஸ் கட்டணங்களை உயர்த்தினால் ஏழைகள் எப்படி பயணம் செய்வார்கள்? அரசின் இந்த பஸ் கட்டண உயர்வின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கட்சியினர் பேசியும், அறிக்கை வெளியிட்டும் வருகின்றனர். ஆனால் அரசு எந்த குரலுக்கும் செவிசாய்க்காமல் உள்ளது. இதனையடுத்து சென்னை, கோவை, விழுப்புரம், சேலம், தஞ்சை உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளில் மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
ஏற்கெனவே ஜல்லிக்கட்டு விவகாரத்தில் மாணவர்கள் போராட்டத்தில் குதித்தது தமிழகம் முழுவதும் அந்த போராட்டம் காட்டுத்தீப்போல பரவி உல கையே திரும்பி பார்க்க வைத்தது. இறுதியில் அரசு மாணவர்களின் போராட்டத்துக்கு அடிபணிந்து அவசர சட்டத்தை இயற்றி போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தது.இந்நிலையில் மீண்டும் பஸ் கட்டண உயர்வுக்கு மாணவர்கள் குரல் கொடுத்து போராட்டத்தில் குதித்துள்ளனர். இந்த போராட்டம் ஜல்லிக்கட்டு போராட்டம் போல வெடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
நாங்கள் போராட்டம் செய்ய வேண்டும் என்று நினைத்து போராட்டத்தில் ஈடுபடவில்லை. எங்களைப் போராட்டத்திற்கு நீங்கள் தான் தள்ளுகிறீர்கள். இந்தப் பேருந்து கட்டண உயர்வை அரசு திரும்பப்பெறாவிட்டால் மீண்டும் ஒரு ஜல்லிக்கட்டு போராட்டம் போல தமிழகம் இந்தப் போராட்டத்தையும் காணும் என மாணவர்கள் தெரிவித்தனர். மேலும், தமிழகத்தையும் எங்களையும் ஆள்வதற்கு பல ரஜினி, கமல் போன்ற ஹீரோக்கள் துடிக்கின்றனர். குறிப்பாக ரஜினி தீவிர அரசியலில் ஈடுபடப்போவதாகவும், மக்களுக்காக இனியும் நான் எதுவுமே செய்யாவிட்டால் அது குற்றவுணர்வாக இருக்கும் என பேசினாரே அவரின் குரல் ஏன் மௌனிக்கிறது எனவும் மாணவர்கள் சத்தமிட்டனர்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்