தமிழகத்தில் எப்போது வேண்டுமானாலும் ஆட்சி கவிழலாம். அதனால், எந்த நேரத்திலும் சட்டமன்றத் தேர்தல் வரலாம் என்ற நிலை பல மாதங்களாக நீடித்துவருகிறது. இந்தக் காரணத்தால், உள்ளூர் கட்சிகள் முதல் தேசியக் கட்சிகள் வரை அரசியல் களத்தில் தீவிரமாக செயல்பட்டுவருகின்றன. மறு பக்கம், ரஜினி, கமல்ஹாசன், விஷால் என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் நேரடி அரசியலில் குதித்துள்ளனர். மாநிலத்தில் சூழல் இப்படி இருக்கையில், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, `தேசியக் கட்சிகள் நோட்டாவோடுதான் போட்டிபோட முடியும்' என்று கிண்டலாகக் கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அவர், `தமிழகத்தில் திராவிட கலாசாரத்தை யாராலும் அழிக்க முடியாது. தமிழகத்தில் தேசியக்கட்சிகளுக்கு இடம் கிடையாது. தேசியக் கட்சிகள் நோட்டாவுடன்தான் போட்டியிட முடியும். திரைத்துறையிலிருந்து சினிமாவுக்கு வரும் அனைவரும் எம்.ஜி.ஆர் ஆகிவிடமுடியாது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். பதவிக்காக எம்.ஜி.ஆர் அரசியலுக்கு வரவில்லை, சமூக நீதியை நிலைநாட்டவே வந்தார். தற்போது, திரைத்துறையிலிருந்து நடிகர்கள் அரசியலுக்கு வருவது ஏன் என்பதை மக்கள் புரிந்துகொள்வார்கள்' என்று ஆவே சமாகப் பேசியுள்ளார். சமீபத்தில் நடந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பா.ஜ.க, நோட்டாவைவிட குறைவான வாக்குகள் வாங்கியது குறிப்பிடத்தக்கது.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்