சென்னை, ஜன.21-
பேருந்து கட்டண உயர்வு ஏழைமக்களின் ரத்தத்தை உறிஞ்சும் கொடூர செயல் என தெரிவித்துள்ள சீமான், அதனை திரும்பபெறாவிட்டால் மக்கள் புரட்சி வெடிக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழக அரசின் பேருந்து கட்டண உயர்வுக்குக் கண்டனம் தெரிவித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார். ஆறு ஆண்டுகளுக்கு பின் பேருந்து கட்டணம் பாதிக்கு பாதி உயர்த்தியிருப்பது மக்களின் தலையில் பேரிடியாக இறங்கியுள்ளதாக சீமான் கூறியுள்ளார்.
அரசு மற்றும் தனியார் பேருந்துகளின் கட்டணத்தை வரலாறு காணாத வகையில் உயர்த்தியிருக்கும் தமிழக அரசின் அறிவிப்பானது மக்கள் நலன் துளியுமற்ற கொடுங்கோல் ஆட்சியின் கோரச்செயலாகும். தங்களது ஊழல்மய ஆட்சியினாலும் நிர்வாகச் சீர்கேட்டினாலும் நிகழ்ந்த இழப்புகளை ஈடுகட்ட மக்களைப் பலிகடாவாக்கியிருக்கும் கையாலாகாத்தனம் என்றும் அவர் கூறியுள்ளார்.
சர்வதேசச் சந்தையில் கச்சாஎண்ணெய்யின் விலைகடும் வீழ்ச்சியினைச் சந்தித்தாலும் அதன் பயன் மக்களைச் சென்றுசேரவிடாமல் தடுக்கிறவண்ணம் மத்திய அரசோடு, மாநில அரசும் அதிகப்படியான வரியினை விதித்து எரிபொருள் விலையினை ஏற்றியிருக்கிறது. ஆகையினால், எரிபொருள் செலவினைக் காரணம் காட்டி பேருந்துக்கட்டண உயர்வை சரியென்று நிறுவ முற்படுவது சிறுபிள்ளைத்தனமானது.
ஆடம்பர விழாக்களினாலும் தேவையற்ற செலவினங்களினாலும் அரசின் நிதியிருப்பைக் காலிசெய்துவிட்டு அதனை ஈடுகட்ட மக்களின் தலையில் சுமையை ஏற்றுவதை எந்தவகையிலும் ஏற்கமுடியாது. அதனை நாம் தமிழர் கட்சி மிக வன்மையாகக் கண்டிக்கிறது. மக்களுக்கு எதிரான இப்பேருந்து கட்டண உயர்வினை உடனடியாகத் திரும்பப் பெறவேண்டும். இல்லையென்றால், மக்கள் புரட்சி மண்ணில் வெடிக்கும் என சீமான் அறிக்கையில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்