எம்.ஜி.ஆரின் பிறந்த நாளை அவரின் ரசிகர்களும் மக்களும் தொண்டர்களும் மிகப்பெரிய அளவில் கொண்டாடுவார்கள். ஆனால் எம்.ஜி.ஆர் தனது பிறந்த நாளை அதிகம் கொண்டாடியதில்லை.
அந்த நாள் அவருக்கு பரவசமான நாளாகவும் இருந்ததில்லை என்பது தான் உண்மை. அவரோடு இருந்த மக்களுக்கே அது மிகப்பெரிய வியப்பைக் கொடுத்தது. ஒரு முறை அவரிடம் வெளிப்படை யாகவே கேட்டு விட்டார்கள். பிறந்த நாள் தான் ஒரு மனி தனுக்கு மிகப்பெரிய மலர்ச்சி யைக் கொடுக்க வேண்டிய நாள். சந்தோசமா இருக்க வேண்டிய நாள். நீங்க மட்டும் இந்த நாளில் மௌனமாகவும், கொஞ்சம் கவலையாகவுமே இருக்கிறீர்களே ஏன்? என்றனர். அதற்கு எம்.ஜி.ஆர் சொன்ன பதில் மெய் சிலிர்க்க வைக்கிறது.
நான் பிறந்த நாள் ஏன் கொண்டாடறதில்லைன்னு கேக்கறீங்க. கொஞ்சம் யோசிச்சு பாருங்க, இந்த நாளில் தானே என்னைப் பெற்றெடுக்க என் அம்மா கதறியிருப்பார். இந்த நாளில் தானே அவர் வலியால் துடியாய்த் துடித்திருப்பார். என் அம்மாவின் பிரசவ வலிதான் இந்த நாள் முழுவதும் எனது கண் களிலும் மனதிலும் இருக்கிறது. இந்த நாளைக் கொண்டாடவேண்டும் என நினைக்கும் போதெல்லாம் எனக்குக் கூசுகிறது. மிகப்பெரிய தயக்கம் வருகிறது. என் அம்மா வலியால் துடித்த நாளை நான் கொண்டாடுவது நியாயமா என்ன ? என்றார்.
Read more: Malaysia Nanban News Paper on 17.1.2018
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்