சென்னை,
தனது ரசிகர்களுடனான சந்திப்பில் ஈடுபட்டிருந்த நடிகர் ரஜினிகாந்த், கடந்த டிசம்பர் 31ஆம் தேதி அரசியல் பிரவேச அறிவிப்பை வெளியிட்டார். தன் அரசியல் பிரவேசம் மீதான நீண்டகால எதிர்பார்ப்பிற்கு முற்றுப் புள்ளி வைத்த அவர், உண்மையான, நேர்மை யான, ஆன்மீக அரசி யலை அமைக்க வேண்டும் எனக் கூறினார்.
அவரது அரசியல் பிரவேசம் ஒருபுறம் இருக்க, அவர் கூறிய ஆன்மீக அரசியல் மிகப்பெரிய வாதங்களை உருவாக்கியது. அவர் கூறிய ஆன்மீக அரசி யலுக்கு பல விளக்கங்களும் கொடுக்கப்பட்டன.
இந்நிலையில், 1995ஆம் ஆண்டு தனது பிறந்தநாளான 12 மற்றும் 13ஆம் தேதிகளில் நடிகர் ரஜினிகாந்த் தூர்தர்ஷனுக்கு அளித்த பேட்டியில் ஆன்மீகம் - அரசியல் ஒப்பிடுக? என்ற கேள்விக்கு, ’அந்த இரண்டையும் ஒப்பிட முடியாதுங்க (சிரித்தபடி), ஒப்பிடவும் கூடாது. ஏன்னா, ரெண்டுமே பாம்பும் கீரியும் மாதிரி. எதிரெதிர் துருவங்கள்’ என பதிலளித்துள்ளார்.
ஆன்மீகம் அரசியல் இரண்டும் எதிரெதிரானவை என அன்று கூறிய ரஜினி, இன்று அதை இணைத்து எந்த மாதிரியான அரசியல் செய்யப்போகிறார் என்ப தைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்