img
img

ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரட்டும்
செவ்வாய் 09 ஜனவரி 2018 16:46:54

img

சென்னை, 

ரஜினியின் அரசியல் குறித்த அறிவிப்பு, மலேசியாவில் நடத்தப்பட்ட நட்சத்திர விழா இவை இரண்டும்  நடிகர் ரஜினியை மிகப்பெரும் சர்ச்சைகளுக்கு தற்போது தள்ளியிருக்கிறது. இதுவே இன்று தமிழகத்தில் எல்லா ஊடகங்களிலும் விவாதமாகவும் சமூக வலைத்தளங்களில் பெரும் விமர்சனமாகவும்  மாறியிருக்கிறது.

இந்நிலையில் ரஜினியின் அரசியல் குறித்து சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் கடுமையாக சாடி யுள்ளார். இந்த ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரட்டும். ஆனால், ரஜினி மராட்டிய மாநிலத்திலோ கர்நாடகாவிலோ அரசியலில் கால் பதிக்க முடியுமா? பிரபல நடிகர் ஒருவரின் பின் திரளும் அத்தனை கூட்டமும் ஒருபோதும் வாக்குகளாக மாறிவிடாது. ரஜினி சொல்லும் ஆன்மீக அரசியல் என்பது ஜாதி, மத, இனம் கடந்தது என்றே அர்த்தப்படும். அந்த அரசியலை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இதுவரை மக்களுக்காக எந்த இடத்திலும் குரல்கொடுக்காத ரஜினி  2021இல் வரும் பொதுத் தேர்தலில் 234 தொகுதியிலும் தனிக் கட்சி அமைத்து களமிறங்குவதாக அறிவித்துள்ளார். உள்ளாட்சித் தேர்தலில் நிற்க மாட்டார், 2019இல் நாடாளுமன்றத் தேர்தலில் வர மாட்டார். ஆனால் நேரடியாக முதல்வர் நாற்காலிதான் அவரின் குறி என்பது நகைப்பிற்குரியது. அது எந்தளவு சாத்தியம்?

1996இல் அரசியலில் மாற்றம் வர வேண்டிய தேவையை மக்கள் உணர்ந்திருந்தபோது அதை சரியாக மக்க ளிடம் கொண்டு செல்வதற்கு, மக்கள் செல்வாக்குள்ளவர்கள் தேவைப்பட்டனர். அப்போது தமிழ்நாட்டை இனி ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது என்று சொல்லிவிட்டு அமெரிக்கா சென்றவர்தானே ரஜினி.

நதிகள் இணைப்புத் திட்டத்திற்கு ஒரு கோடி தருவதாக மக்களிடம் ரஜினி கொடுத்த வாக்குறுதி என்னவானது? நட்சத்திரக் கலைவிழாவை நடத்தித்தான் நடிகர் சங்க கட்டடம் கட்ட வேண்டுமா? ரஜினி நினைத்தால் ஒரு காசோலை போதுமே. 10 கோடி கொடுத்துவிடலாமே. கமல்ஹாஸனாலும் ஏன் முடியாது.

குரல் கொடுக்க வேண்டிய காவிரி அணைப் பிரச்சினை, மேகதாது அணைக் கட்டுப் பிரச்சினையில் வீட்டுக்குள் இருந்து மௌனம் காத்துவிட்டு இன்று ஜெயலலிதா இல்லாத சூழ்நிலையில், கலைஞர் இயங்கமுடியாத நிலை யில் முதல்வர் குறித்த அவரது கனவை மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.

68 வயதில் ரஜினி அரசியலுக்கு வரத் துடிக்கிறார். விஷாலைப் பார்த்து நான் கேள்வி கேட்கிறேன் இளைய சமு தாயத்திற்கு வழிவிடுங்கள் எனக் கூறும் நீங்கள் ரஜினியின் வருகையை ஏன் எதிர்க்கவில்லை.அவர் அரசி யலுக்கு வரட்டும் என்னிடம் நிறையக் கேள்விகள் இருக்கின்றன என்கிறார்  சரத்குமார்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்

தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன

மேலும்
img
இந்தியாவில் சூரிய சக்தியின் பயன்பாடு அதிகரிப்பு பிரதமர் மோடியை பாராட்டிய பில் கேட்ஸ்

நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு

மேலும்
img
தமிழகத்தில் மர்ம காய்ச்சல் ஒரே நாளில் 100 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி பீதியில் மக்கள்

சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்

மேலும்
img
மஸ்கட் ஏர்போர்ட்டில் இருந்த விமானத்தில் திடீர் தீ விபத்து- 14 பயணிகள் படுகாயம்

மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

மேலும்
img
9 பேரை கொன்ற ராணுவவீரருக்கு 18 ஆண்டுகள் சிறை

பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img