சென்னை,
ஆர்.கே.நகரில் டிடிவி தினகரனின் வெற்றி கொண்டாடப்படுவது அவமானப்பட வேண்டியது என்கிற ரீதியில் நடிகர் கமல் ஹாசன் கருத்து தெரிவித் துள்ளார். ஜெ.வின் மறைவிற்கு பின் நடிகர் கமல்ஹாசன் அரசியல் தொடர்பான கருத்துகளை தெரிவித்து வந்தார். அதன்பின், தனது விஸ்வரூபம்-2 பட வேலை காரணமாக கடந்த மாதம் அரசியல் பற்றி எந்த கருத்தும் தெரிவிக்காமல் இருந்தார். இந்நிலையில், பிரபல வார இதழில் அவர் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா செய்யப்பட்டது பற்றி கருத்து தெரிவித்துள்ளார்.
அதில், ஊர் அறிந்த குற்றம் இப்படி வெளிப்படையாக நடக்க மக்களும் உடந்தையாக இருப்பது தான் எவ்வளவு பெரிய சோகம். முதலமைச்சர் தொடங்கி சுயேச்சை வேட்பாளர் வரை வாக்காளர்களுக்கு பல ஆயிரங்கள் நிர்ணயித்து அதை கச்சிதமாக வழங்கியது ஊடகங்களில் வெளிவந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சுயேச்சை வேட்பாளரை நம்பி வாக்காளர்களே தங்களுக்கு உலை வைத்துக் கொண்டுள்ளனர். சுயேச்சையின் பதிலில் மயங்கிய சிலர் அவரின் வெற்றியின் வியூகங்களை பட்டியல் போட்டு பாராட்டி வருகின்றனர். இப்படி ஆகப்பெரிய அவமானம் எந்த புள்ளியில் கொண்டாட்டமாக மாறுகிறது என்பது தான் தமக்கு பிடிபடாத கேள்வி எனவும் தம் வீட்டில் ஒருவருக்கு எந்த வழியிலாவது பணம் கிடைத்தால் போதும் என்ற சுயநலம் கொண்ட மக்கள் இருக்கும் வரை ஜனநாயகம் என்ற புனிதம் கெட்டு போய்விடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்