சென்னை,
கடந்த ஞாயிற்றுக்கிழமை நடிகர் ரஜினி அரசியல் பிரவேசத்தை அறிவித்துள்ளார். கமல்ஹாசன் கட்சி தொடங்குவார் என்று பேசப்பட்ட நிலையில் ரஜினி முந்திக் கொண்டதால் அடுத்து கமல்ஹாசன் எத்தகைய அரசியல் பிரவேசத்தை முன்னெடுத்துச் செல்வார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கமல்ஹா சனும் ரஜினியும் திரைத்துறையில் போட்டியாளர்களாக இருந்தாலும் தனிப்பட்ட முறையில் அவர்களுக்கிடையே நெருக்கமான நட்பு இருக்கிறது. எந்த ஒரு விஷயத்திலும் அவர்கள் இருவரும் பேசி ஆலோசனை செய்து கொள்வதை வழக்கமாக வைத்து இருக்கிறார்கள்.
ரஜினி அரசியல் கட்சி தொடங்க வேண்டும் என்று முடிவு செய்ததும் அவர் முதன் முதலில் அதுபற்றி கமல்ஹாசனிடம் தான் விவாதித்ததாக கூறப்ப டுகிறது. இந்த நிலையில் வரும் 6-ஆம்தேதி மலேசியாவில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் நட்சத்திர கலை விழா நடைபெற உள்ளது. அந்த விழாவில் ரஜினி, கமல் இருவரும் பங்கேற்க உள்ளனர். ரஜினியின் அரசியல் பிரவேச அறிவிப்புக்கு பிறகு அவர்கள் இருவரும் நேரிடையாக சந்திப்பது இதுவே முதல் முறையாகும். அப்போது இருவரும் தனித் தனியாக அமர்ந்து தமிழக அரசியல் குறித்து பேச உள்ளனர்.
Read More: Malaysia Nanban News Paper on 3.1.2017
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்