ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்துவரும் முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையத்திடம் தினகரன் தரப்பு ஆவணங்களை சமர்ப்பித்துள்ளது.
ஜெயலலிதா, உடல்நலக் குறைவால் சென்னை அப்போலோ மருத்துவமனையில், கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் 22-ம் தேதி அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் 75 நாள்கள் சிகிச்சைபெற்றுவந்த அவர், டிசம்பர் 5-ம் தேதி உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் அதிகாரபூர்வமாக அறி வித்தது. அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் மர்மம் இருப்பதாகவும், அதுகுறித்து நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் பல்வேறு தரப்பி லிருந்து கோரிக்கைகள் எழுந்தன. ஜெயலலிதா மறைவுகுறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் கோரிக்கை வைத்திருந்தார். இந்நிலையில், ஜெயலலிதா மரணம் தொடர்பாக, ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. இதையடுத்து, ஜெயலலிதாவுக்கு நெருக்கமானவர்களிடத்தில் விசாரணை நடத்திவருகிறது ஆறுமுகசாமி தலைமையி லான விசாரணை கமிஷன்.
இதன் தொடர்ச்சியாக, தினகரனுக்கு சம்மன் அனுப்பியது விசாரணை கமிஷன். இதையடுத்துதான், தினகரன் தரப்பிலிருந்து பென் டிரைவ் சமர்ப்பிக்க ப்பட்டது. தினரகன் தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன், ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் பென் டிரைவை சமர்ப்பித்தார். ஜெயலலிதா சிகிச்சைபெற்றபோது, எடுக்கப்பட்ட வீடியோ, பென் டிரைவில் இருப்பதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆறுமுகசாமி சம்மன் அனுப்பியதைத் தொடர்ந்து, தினகரன் தரப்பு ஆவணங்களைத் தாக்கல்செய்துள்ளது.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்