அரசியலில் ஈடுபடப்போவதாக ரஜினிகாந்த் அறிவித்தையடுத்து, கிராமங்கள் தோறும் மன்றங்களைத் தொடங்க வேண்டும் என்று தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.
அதன்படி, ரஜினி பிறந்த ஊரான கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளியை அடுத்துள்ள நாச்சிக்குப்பத்தில், புதிய மன்றங்களைத் தொடங்கும் பணி நேற்று தொடங்கப்பட்டது. நாச்சிக்குப்பதில் ரஜினியின் பெற்றோர்கள் நினைவாக அமைக்கப்பட்டுள்ள ரானோஜிராவ் ராம்பாய் பொது நல அறக்கட்டளை முன்பாக, மாவட்ட ரஜினி ரசிகர்கள் மன்றம் சார்பில் காலண்டரை வெளியிட்டு, புதிய மன்றங்கள் தொடங்குவதற்கான பணிகளை கிருஷ்ணகிரி மாவட்ட ரஜினி ரசிகர் மன்றத் தலைவர் மதியழகன் ஆரம்பித்து வைத்தார்.
மாவட்டத் தலைவர் மதியழகன் கூறுகையில், `ரஜினி, தமிழன் இல்லை என ஒரு சில அரசியல்வாதிகள் கூறிவருகின்றனர். இதைத் தவிடு பொடியாக்கத் தமிழகத்தில் ரஜினி பிறந்த ஊரான நாச்சிக்குப்பத்தில் புதிய மன்றங்களைத் தொடங்கும் பணியை ஆரம்பித்துள்ளோம். தமிழக மக்கள் ரஜினிக்குத் துணைநிற்பார்கள். சட்டசபைத் தேர்தலில் ரஜினியின் பிறந்த கிராமம் இருக்கும் வேப்பனப்பள்ளி சட்டசபைத் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்பது எங்கள் விருப்பம்'' என்று தெரிவித்தார்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்