ஆலந்தூர், ஜன.2-
சினிமாவில் நடித்து அரசியலுக்கு வந்தால் தலைவனாக்கி நாட்டை ஆள வைப்பார்கள் என்று நினைப்பதா?. கர்நாடகா, மராட்டியத்தில் ரஜினிகாந்த் கட்சி தொடங்க முடியுமா? என சீமான் ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை விமான நிலை யத்தில் நிருபர்களிடம் கூறிய தாவது: தமிழகத்தை தமிழன்தான் ஆள வேண்டும் என்ற கொள்கை முடிவு எடுத்து உள்ளோம். திருக் குறள் இதைத்தான் கூறுகிறது. ரஜினி, படங்களில் நடிப்பதில் பிரச்சினை இல்லை. தலைவராக, முதல்- அமைச்சராக எங்களை ஆளுவதில்தான் சிக்கல் உள்ளது.
நான் ஆள்வது என்பது, என் உரிமை. வேறு ஒருவர் ஆள்வது என்பது, நான் அடிமை. நாங்கள் அடிமையாக வாழ தயாராக இல்லை. மன்னராட்சி காலத்தில் படை எடுத்து வந்து ஆண்டார்கள். இவர், படம் நடித்துவிட்டு வந்து ஆளுவாரா?. காவேரியில் தண்ணீர் கேட்டபோது லட்சக் கணக்கா னவர்களை சோந்த நாட்டில் அகதியாக அடித்து விரட்டினார்கள். அந்த ஜனநாயகத்தை யாரும் விவாதிக்கவில்லையே. யாரும் அப்போது பேச வில்லையே ஏன்?.
ரஜினி அரசியலுக்கு வந்தால் கடுமையாக எதிர்ப்போம். அவரை எதிர்த்துதான் அரசியல் செவோம். ரஜினி வருகை தமிழகத்தில் எந்தவித மாற்றத்தையும் கொண்டு வராது. எந்தந்த இடத்தில் ‘சிஸ்டம்’ சரி இல்லை என்பதை கூறமுடி யுமா?. பெங்களூரு, கோலார்தங்கவாயல், மராட்டியத்தில் வசித் தாலும் தமிழர்கள்தான். நீ தமிழன் என்று சோல்லி இனத்தை மாற் றினால் ஏமாற்றுகிறா என்றுதான் அர்த்தம். ரஜினி, விஷால் தமிழர் களாகி விட்டால், நாங்கள் யார்?.
வெள்ளைக்காரன் பல ஆண்டுகள் இந்தியாவில் ஆண்டதால் இந்தியன் ஆகிவிடமுடியுமா?. 2021-ம் ஆண்டு கட்சியை ஆரம்பிக்க உள்ளதாக ரஜினி கூறி உள்ளார். வரட்டும். தமிழகத்தை பார்த்து தற்போது எல்லாரும் சிரிக்கத்தான் செகின்றனர். ரஜினியை பாரதிய ஜனதா கட்சி இயக்குவதாக நினைக்கிறேன். அவரை பாரதிய ஜனதாதான் இறக்குகிறது. கமல்ஹாசன் மவுனமாக இருக்கும்போது இவர் பேசுவதும், இவர் மவுனமாக இருக்கும்போது அவர் பேசுவ தற்கும் உத்தரவு வேறு இடத்தில் இருந்து வருகிறது.
சினிமாவில் நடித்து அரசியலுக்கு வந்தால் நம்மை தலைவராக்கி நாட்டை ஆள வைத்துவிடுவார்கள் என்று நினைப்பதா?. தமிழக மக்களை ஒரு இழி வான பார்வையாக பார்ப்பதா?. மற்ற மாநிலங்களை போல் இல்லாமல் கேடு கெட்ட ஒரு கூட்டம் அலைகிறது. கர்நாடகா அல்லது மராட்டியத்தில் அரசி யல் கட்சி தொடங்க முடியுமா?. இவ்வாறு அவர் கூறினார்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்