மும்பை,
மராட்டிய மாநிலம் மும்பையில் உள்ள மில்லில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 15 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்திருப்பதாகவும் பலியானோரின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் எனவும் அஞ்சப்படுகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.மராட்டிய மாநிலம் மும்பை யின் லோயர் பரேலில் அமைந்துள்ள கட்டடத்தில் உள்ளது கமலா மில்ஸ். சேனாபதி மார்க் பகுதியில் அமைந்த இந்த மில்லின் 3ஆவது மாடியில் வெள்ளிக்கிழமை அதிகாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் உடனடியாக தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து, சம்பவ இடத்துக்கு 6-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களும் தண்ணீர் லோரிகளும் அங்கு விரைந்து வந்தன. தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர்.திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி உடல் கருகி 15 பேர் பலியாகினர். மேலும், 12 பேர் தீயில் சிக்கி படுகாயம் அடைந்துள்ளனர். படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்து வமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
Read More: Malaysia Nanban News Paper on 30.12.2017
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்