ஹரிவராசனம் விருது இந்த ஆண்டு பின்னணிப் பாடகி சித்ராவுக்கு வழங்கப்பட இருக்கிறது. கேரள அரசின் சார்பில் கடந்த 2012-ம் ஆண்டு முதல் சிறந்த பாடகர்களுக்கான ஹரிவராசனம் விருது வழங்கப்பட்டு வருகிறது. முதல் ஆண்டு ஹரிவராசனம் விருது பாடகர் கே.ஜே.ஜேசுதாஸுக்கு வழங்கப்பட்டது. அதன் பின்னர் தொடர்ச்சியாகப் பாடகர்கள் ஜெயசந்திரன், ஜயன், எஸ்.பி.பாலசுப்பிரமணியம், எம்.ஜி.ஸ்ரீகுமார், கங்கை அமரன் ஆகியோருக்கு அந்த விருது வழங்கப்பட்டுள்ளது. 2016 - 2017-ம் ஆண்டுக்கான கேரள அரசின் ஹரிவராசனம் விருதுக்கு சினிமா பின்னணிப் பாடகி சித்ரா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சபரிமலையில் வருகிற ஜனவரி 14-ம் தேதி மகரவிளக்குப் பூஜையின்போது நடைபெறும் விழாவில் பாடகி சித்ராவுக்கு ஹரிவராசனம் விருது வழங்கப்பட இருக்கிறது. அந்த விருதுடன் 1 லட்சம் ரொக்கப் பரிசும் வழங்கப்பட இருக்கிறது. பாடகி சின்னக்குயில் சித்ரா மலையாளம், கன்னடம், தமிழ், தெலுங்கு, ஒடிசா, இந்தி, அசாமி, வங்காளம் போன்ற பல இந்திய மொழிகளில் பாடி வருகிறார். ஆறு முறை இந்தியத் தேசிய திரைப்பட விருதுகளையும் ஆறு முறை தென்னிந்திய ஃபிலிம்பேர் விருதுகளையும் மற்றும் பல்வேறு மாநில விருதுகளையும் பெற்றுள்ளார்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்