சென்னையை அடுத்த மாதவரத்தில் மாப்பிள்ளை பார்ப்பதுபோல நடித்து பணத்தைத் திருடியவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
அவர் சென்ற பிறகு, படுக்கை அறைக்குச் சென்ற கிருஷ்ணமூர்த்தி, பீரோவில் வைத்திருந்த 1.85 லட்சம் ரூபாய் மாயமாகியிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். பிறகு, மாதவரம் போலீஸில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போதுதான் மாப்பிள்ளை பார்க்க வந்த கிருஷ்ணமூர்த்தி மீது போலீஸாருக்கு சந்தேகம் வந்தது.
அவர் குறித்து விசாரணை நடத்தினர். சுப்பிரமணியனிடம், கிருஷ்ணமூர்த்தி கொடுத்திருந்த செல்போன் நம்பர் மூலம் அவர் இருக்கும் இடம் தெரியவந்தது. இதையடுத்து, கிருஷ்ணமூர்த்தியிடம் நைஸாகப் பேசிய போலீஸார் அவரது இருப்பிடத்தைக் கேட்டறிந்தனர். அப்போது, கிருஷ்ண மூர்த்தி, திருச்சி, ஸ்ரீரங்கத்தில் இருப்பதாகத் தெரிவித்தார். உடனடியாக அங்குச் சென்ற போலீஸார் கிருஷ்ணமூர்த்தியை மடக்கிப்பிடித்து விசாரித்தனர். அப்போது, அவரது பெயர் கிருஷ்ணமூர்த்தி இல்லை சந்தானகோபாலன் என்று தெரிந்தது. மேலும், அவர், மாப்பிள்ளைப் பார்ப்பதாகக் கூறி கரூர், ஈரோடு ஆகிய இடங்களில் கைவரிசை காட்டியிருப்பதும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து சந்தான கோபாலனைக் கைது செய்த போலீஸார், அவரிடமிருந்து 1.75 லட்சம் ரூபாயையும் பறிமுதல் செய்தனர்.
சென்னையில் கேஸ் சிலிண்டர் அலுவலகத்திலிருந்து வருவதாகவும் வாடகைக்கு வீடு கேட்பது போலவும் குடிக்கத் தண்ணீர் கேட்பது போலவும் அதிகாரி என்றும் தனியாக இருக்கும் பெண்களைக் குறிவைத்து வீட்டுக்குள் நுழைந்து பணம், நகைகளைத் திருடிய சம்பவங்கள் நடந்துள்ளன. ஆனால், புதிய யோசனையாக வரன் பார்ப்பதுபோல வந்த ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த மோசடி பேர்வழி பணத்தைத் திருடிய சம்பவம் மாதவரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்