தங்கமுகையதீன்
மனிதனின் ஆசைக்கு அளவிருக்காது. ஆயிரம் ஆண்டுகள் உயிருடன் வாழ வேண்டும் என்று நினைக்கும் ஒரு விஞ்ஞானி, அதற்காக என்னென்ன வெல்லாம் செய்வான் என்பதை தனது கற்பனை ஓடத்தில் மிதந்து சென்றிருக்கிறார் இயக்குநர் சி.வி.குமார். சித்தர்களின் கூடுவிட்டு கூடுபாயும் வித்தையை விஞ்ஞானத்தில் புகுத்திருக்கும் இயக்குநரின் எண்ண ஓட்டம், மனிதர்களின் கற்பனை எதுவரைக்கும் செல்கிறது என்பதை காட்டுகிறது. விண்ணையும் தாண்டும் மனிதனின் கற்பனை, மரணத்தை எப்படி வெல்வது என்ற முயற்சிக்கு வந்துள்ளது. அதாவது யதார்த்தத்தை மீறி சிந்திப்பது. அல்லது இயற்கையை மீற நினைப்பது. இதுபோன்ற கற்பனைவாதிகள்தான் இறைவனின் தனித்தன்மையை மறக்கடிக்க முயல்கிறார்கள். இது சூரியனை ஊதி அனைக்கும் முயற்சி.
சரி இனி கதைக்கு வருவோம். மனிதனின் உடல் மரணத்திற்குப்பின் அழிந்து போகும். ஆனால் அவனது எண்ணங்ளை அழியவிடாமல் பாதுகாத்தால் பல ஆயிரம் ஆண்டுகள் அவனது எண்ணங்களும் சிந்தனைகளும் உயிர்வாழும் என்று விஞ்ஞானி நினைக்கிறார். அதனால் தனது மூளையில் பதி வாகியிருக்கும் எண்ணங்களை (ஸ்ராக்ஸ்) நகல் எடுத்து, அதை ஒரு கணனி பெட்டகத்தில் (டிஸ்கில்) பதிய வைத்துக் கொள்கிறார். தனது மர ணத்திற்குப்பின் யாருடைய மூளையில் தனது சிந்தனைகளை செலுத்த வேண்டுமோ அவர்களையும் தனது சிந்தனையில் பதிய வைத்துக் கொள்கி றார். பிறகு அந்த விஞ்ஞானி மரணமடைந்துவிடுகிறார். ஆனால் அவரது சிந்தனைகள் மரணக்கவில்லை. ஏற்கனவே பதியவைத்துள்ள மனிதர்களின் மூளை யில் இவரது சிந்தனை போய் உட்கார்ந்து கொள்கிறது. அந்த மனிதர்களின் மூலம் தான் நினைத்திருந்ததை சாதித்துக் கொள்கிறார் விஞ்ஞானி. எப்படி சாதித்துக் கொள்கிறார் என்பதை வெள்ளித்திரை விளக்குகிறது.
போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் சந்தீப் நேர்த்தியாக தனது கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருப்பது பாராட்டத்தக்கது. மருத்துவராக நடித்திருக்கும் லாவண்யா நடித்திருக்கும் காட்சிகள் ரசிகர்களை கவரும் விதத்தில் நடித்துள்ளார். ராணுவ அதிகாரியாக வரும் ஜேக்கி ஷெராப் உச்சக்கட்டக் காட்சியின் வில்லத்தனத்திற்கு பொருத்தமானவராக நடித்துள்ளார். தன்நம்பிக்கை பயிற்சி கொடுக்கும் டேனியல் பாலாஜி முதல் பாதியில் கதாநாயகனக்கும் பொருந்துகிறார். வில்லனுக்கும் பொருத்தமானவராக இருக்கிறார். இவரது கதாபாத்திரம் படத்திற்கு கூடுதல் பலத்தை அளிக்கிறது. பின்னணி இசையில் ஜிப்ரான் அசத்தியுள்ளார். பாடல்கள் ரசிக்கும்படியாகவே இருக்கிறது.