திங்கள் 02, அக்டோபர் 2023  
img
img

புதுமுகங்கள் நடிக்கும் செயல்  
செவ்வாய் 12 டிசம்பர் 2017 17:00:13

img
சி.ஆர்.கிரியேசன்ஸ் நிர்மலா ராஜன் வழங்கும் திவ்யா ஷேத்ரா பிலிம்ஸ் தயாரிக்கும் முதல் படம் செயல். ராஜன் தேஜேஸ்வர் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக தருஷி என்ற புதுமுகம் நடிக்கிறார். மற்றும் ரேணுகா, முனீஸ்காந்த், சூப்பர்குட் சுப்பிரமணியம், வினோதினி, தீப்பெட்டி கணேசன், ஆடுகளம் ஜெயபாலன், தீனா ஆகியோர் நடிக்கிறார்கள்.
 
வில்லனாக சமக் சந்திரா அறிமுகமாகிறார்.கதை திரைக்கதை வசனம் இயக்கம் ரவி அப்புலு. இவர் விஜய் நடித்த ஷாஜகான் படத்தை இயக்கியவர். 15 வருடங்களுக்கு பிறகு இவர் இயக்கும் படம் இது. படம் பற்றி இயக்குனர் கூறியதாவது. வட சென்னையில் தங்கசாலை மார்கெட்டை தன் வசம் வைத்துக் கொண்டிருக்கும் தண்டபாணியை, அங்கு மளிகை சாமான் வாங்க வந்த ஹீரோ எதிர் பாராத விதமாக அடிக்க நேரிடுகிறது.
 
இதனால் மார்கெட்டில் ரவுடி தண்டபாணியின் மீது மக்கள் வைத்திருந்த பயம் போய்விடுகிறது இதனால் அவன் மார்கெட்டை இழக்க நேரிடுகிறது.  மீண்டும் அந்த மார்கெட்டை பிடிக்க வேண்டும் என்றால், ஹீரோவை அதே மார்கெட்டில் வைத்து பொதுமக்கள் பார்க்கும் படி அடிக்க வேண்டும். ஹீரோவை மார்கெட்டில் வைத்து அடித்தால் மட்டுமே ரவுடி தண்டபாணியின் கைக்கு மார்கெட் கிடைக்கும்.
 
இந்த சூழலில் ரவுடி ஹீரோவை அடித்தானா? அல்லது ரவுடியை ஹீரோ அடித்தானா மார்கெட் யார் வசம் சென்றது என்பதை அதிரடி கலந்த நகைச்சுவை யுடன் புதிய கோணத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. இதில் ஹீரோ செய்த ஒரு நல்ல செயல் அடுத்தவர்களையும் செய்ய தூண்டுகிற செயலாக இருக்கும். இதில் கதாநாயகியாக நடித்திருக்கும் தருஷி ஹீரோ தன்னிடம் காதலை சொல்ல வரும் போதெல்லாம் அவர் செய்யக்கூடிய  விஷயங்கள் அனை வரையும் கவரும்.
 
இதில் ரவுடிகளுக்கு குருவாக ஆடுகளம் ஜெயபாலன் மற்றும் ஓய்வு பெற்ற ரவுடிகளாக முன்டாசுப்பட்டி ராமதாஸும், சூப்பர்குட் சுப்ரமணியம் நடித்துள்ள னர். 
பின்செல்

கோலிவுட் செய்திகள்

img
மெஹந்தி சர்க்கஸ்

ஸ்வேதாவின் மகள் தனது தாயின் பழைய

மேலும்
img
சீதக்காதி  விமர்சனம்

சினிமாவுக்கு இலக்கணம் தேவையில்லை

மேலும்
img
கனா விமர்சனம்

கனா ஒவ்வொரு இந்தியனின் தூக்கத்திலும்

மேலும்
img
1மில்லியன் பார்வையாளர்களை கடந்த ஜி.வி.பிரகாஷின் "ஐயங்கரன்" டீசர்

படங்களிலிருந்து வேறொரு ஸ்டைலில் உருவாகி

மேலும்
img
பில்லா பாண்டி விமர்சனம்

வெளிப்படுத்தி மடைதிறந்த வெள்ளம்

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img